மென்பொருள் இல்லாமல் இரகசிய கோப்புகளை சுலபமாக பாதுகாக்கலாம்


நமது இரகசிய, முக்கிய கோப்புகள் மற்றும் கோப்புறைகள் அனைத்தையும் தனியாக ஒரு ட்ரைவில் வைத்துவிட்டு, அந்த குறிப்பிட்ட ட்ரைவை எவரும் கையாள முடியாதவாறு மிக சுலபமாக பாதுகாப்பது எப்படி என்று இங்கே காணலாம்.

Start menu வில் Run அல்லது search box (Windows vista/7) சென்று gpedit.msc என தட்டச்சு செய்து என்டர் கொடுங்கள்.


இப்பொழுது திறக்கும் Local Group Policy Editor விண்டோவில் இடதுபுற பேனில் User Configuration -> Administrative Templates -> Windows Components -> Windows Explorer என்ற பகுதிக்கு செல்லுங்கள். அங்கு Windows Explorer ஐ க்ளிக் செய்தபிறகு, வலது புற Settings டேபில் Prevent access to drives from My Computer என்பதை இரட்டை க்ளிக் செய்திடுங்கள்.


திறக்கும் வசனப்பெட்டியில் enabled ரேடியோ பட்டனை கிளி செய்து கொள்ளுங்கள். பிறகு கீழே உள்ள options பெட்டியில் எந்தெந்த ட்ரைவ்களை Restrict செய்ய வேண்டுமோ அவற்றை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


அவ்வளவுதான்! இனி My Computer திறந்து பார்க்கும் பொழுது, நாம் restrict செய்த ட்ரைவ் தெரியும், ஆனால் அதை திறக்க முயலும் பொழுது, கீழே தரப்பட்டுள்ளது போன்ற பிழைச் செய்தி வரும்.


மறுபடியும் பழையபடி மாற்ற, மேலே சொன்ன அதே வழியை பின்பற்றி Disable க்ளிக் செய்தால் போதுமானது. இந்த ட்ரிக்கை விண்டோஸ் ஹோம் பதிப்புகள் தவிர்த்து மற்ற பதிப்புகளில் செய்ய இயலும். (Administrative Rights உங்களுக்கு இருக்க வேண்டும்)

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"