நிர்வாண திருமணம் (காணொளி இணைப்பு)


பிரிட்டனை சேர்ந்த கெலி கிளிங்ரன், லீ விக்கெற்ஸ் ஆகிய இருவரும் பிரிமிங்கம் நகரத்தில் கடந்த 11 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து இருக்கின்றார்கள். ஆயினும் இவர்களால் சம்பிரதாயபூர்வமாக திருமணம் செய்ய முடியவில்லை.காரணம் பொருளாதார நெருக்கடி.

ஆனால் உள்நாட்டு வானொலி நிறுவனங்களில் ஒன்றான வி. ஆர். எம். வி மூலம் இவர்களின் அக்கனவு நனவாகி விட்டது. அந்நிறுவனத்துக்கு மனப்பூர்வமாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

இவ்வானொலி நிறுவனம் வித்தியாசமான போட்டி ஒன்றை நடத்தி இருந்தது. நிர்வாண திருமணப் போட்டி. இதில் கெலி, லீ உட்பட ஏராளமான ஜோடிகள் போட்டியிட்டு இருந்தனர். ஆனால் ரசிகர்களின் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று இருவரும்தான் வெற்றி ஈட்டி இருந்தனர்.

எனவே வெற்றியீட்டிய இருவருக்கும் சொந்தச் செலவில் நிர்வாண திருமணத்தை நடத்தி வைத்தது வானொலி நிறுவனம்.திருமணம் Brook Honiley Court Hotel இல் இடம்பெற்றது. திருமணம் நிறைவு பெறும் வரை மணமகன், மணமகள் இருவரும் கிட்டத்தட்ட முழு நிர்வாணமாகவே காட்சி கொடுத்தனர்.

மணமகன் மெல்லிய உள்ளாடை ஒன்றை மாத்திரம் அணிந்து இருந்தார். இவர் கையில் வைத்து இருந்த தொப்பி ஒன்றால் பிறப்பு உறுப்பு பகுதியை மறைத்து இருந்தார்.

மணமகள் மெல்லிய வலைத் துணி ஒன்றை தலை மயிரில் முடிந்து இருந்தார்.அவ்வலையால் அரைவாசி உடலை போர்த்தி இருந்தார்.திருமண வைபவத்துக்கு குடும்பத்திவர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரும் வந்து இருந்தனர்.

இவர்கள் முன்னிலையில் நிர்வாணமாக தோன்றியபோது மிகவும் கூச்சமாக இருந்தது என்கின்றனர் மணமகனும், மணமகளும்.ஆயினும் இது மிகவும் சுவாரஷியமான அனுபவம் என்றனர்.

திருமண வீடியோவை கீழே உள்ள இணைப்பினில் பாருங்கள்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"