தலையணையை சரியான அளவிலும் சரியான மிருதுத்தன்மையிலும் தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் பல பிரச்சினைகளிலிருந்தும் தப்பலாம்.
விலங்குகள் கூட இந்த அறிவைப் பெற்றிருக்கின்றன.உதாரணமாக காட்டு யானைகள் புற்களை சேகரித்து தலையணையாக பயன்படுத்திக்கொள்கின்றனவாம். ஒட்டகச் சிவிங்கிகள் பெரும்பாலும் நின்று கொண்டேதான் தூங்கும் பழக்கம் கொண்டவை. ஆனாலும் சில நேரங்களில் படுத்தும் ஓய்வெடுக்கும். அப்போதெல்லாம் தனது இடுப்பையே தலையணையாக பயன்படுத்துமாம்.
ஒழுங்கற்ற தன்மை, போதுமான மிருதுத் தன்மை இல்லாத தலையணைகளை பயன்படுத்தினால் பல பிரச்சினைகள் தோன்றுகின்றன. நம்முடைய கழுத்தெலும்பில் குறுக்குப் பட்டைகள் போன்ற எலும்புகள் (cervical vertebrae bones) தட்டு போல காணப்படுகின்றன.
இந்த எலும்பிலான குறுந்தட்டுகள் இடையே நிறைய இடைவெளிகள் காணப்படுகின்றன. அவற்றில் நூற்றுக்கணக்கான நரம்புகள் நிறைந்து காணப்படுகின்றன. அவை மூளைக்கும், கைகளுக்கும், தோள்களுக்கும் மற்றும் ஏனைய பகுதிகளுக்கும் செல்லும் முக்கியமான உணர்கடத்திகளாகும்.
நீங்கள் உங்கள் கழுத்துக்கு போதுமான அளவு ஓய்வை அளித்தீர்களானால் இவை ஒரு பிரச்சினையில்லாமல் இயங்கி உங்கள் தூக்கத்தை இரட்டிப்பு மகிழ்ச்சியாக்குகின்றன. அதாவது மெல்லிய ஆனால் உறுத்தாத போதுமான அளவு உயரமான தலையணையைப் பயன்படுத்தும்போது.
ஆனால் சரியான தலையணையைப் பயன்படுத்தவில்லை என்றால் கழுத்துப் பகுதியிலிருக்கும் நரம்புகள் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக கழுத்து வலி, தலைவலி, தோள் வலி, கழுத்து அப்படியே நின்று விடுதல் (Stiff Neck) மற்றும் கைகளில் மரத்துப்போய் வாதம் போன்ற நிலைமை ஆகிய விபரீத விளைவுகள் உண்டாகி விடுகின்றன.
நமது கழுத்துக்கு கீழே சரியாக 15 டிகிரி கோணத்தில் தலையணை இருக்க வேண்டுமாம். இதுவே மருத்துவர்கள் ஆராய்ச்சிகளின் முடிவாக நமக்கு தெரிவிக்கும் முடிவு.
தலையணையின் தடிமன் எவ்வளவு இருக்க வேண்டும்?
நம்முடைய டர்க்கி டவல் இருக்கிறதே அந்த மிருதுத்தன்மையும், அதை நான்காக மடித்து வைத்தால் எவ்வளவு உயரம் இருக்குமோ அந்த உயரம் போதும். சற்று உயரம் கூட இருந்தாலும் பரவாயில்லை. ரொம்ப உயரம் வேண்டாம். ரொம்ப மிருதுவான தன்மை கூடாது. காட்டன் தலையணை நல்லது.
மல்லாந்து படுத்தலே நல்லது. பக்கவாட்டில் படுத்தல் நல்லதல்ல. காரணம் நம்முடைய இரத்த அழுத்தம் சீராக இராது. நேராக மல்லாந்து படுத்தால் இரத்த ஓட்டமும், அழுத்தமும் சீராக இருக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வேலை செய்யும்போது மட்டுமல்ல. உறங்கும்போதும் அதற்கு தேவையான சக்தியை உடல் எடுத்துக்கொள்கிறது. அதனால்தான் காலையில் எழும்போது டயர்டாக இருப்பதைப் போல் உணர்கிறோம். அதுவும் மல்லாந்து படுக்கும்போது எடுப்பதைவிட ஒருக்களித்து பக்கவாட்டில் படுத்து உறங்கும்போது அதிக சக்தியை உடல் எடுத்துக்கொள்கிறது. அதனால் தலைவலி, மனஅழுத்தம், கழுத்து நின்றுவிடுதல் (சுளுக்கு), முதுகு வலி போன்ற இடையூறுகள் உண்டாகின்றன.
1 அல்லது 2 இன்ச் அளவுள்ள உயரம் மற்றும் 15 டிகிரி கோணம் இரண்டுமே தலையணைக்கு மிகச் சரியான அளவாக மருத்துவ விஞ்ஞானம் பரிந்துரைக்கிறது. சற்று அளவு வேறுபட்டால் பரவாயில்லை. மிகுந்த அளவில் வேறுபட்டால் மேற்கண்ட பாதிப்புகள் உண்டாகி நமது அன்றாட வேலைகளை பாதிக்கின்றன.