சவுதி அரேபியாவின் இளவரசரருக்காக உருவாகும் பறக்கும் அரண்மனை

எண்ணை வளம் கொழிக்கும் சவுதி அரேபியாவின் இளவரசர் அல்வாலீத் பின் தலால் மிகப்பெரிய கோடீசுவரர் ஆவார்.

இவர் அதிநவீன ஏ380 சூப்பர் ஜம்போ விமானத்தை விலைக்கு வாங்கியுள்ளார். அதை அரண்மனை போன்று சகல வசதிகளுடன் மிகப் பிரமாண்டமாக மாற்றியமைத்து வருகிறார்.

485 மில்லியன் டொலர் (ரூ.2770 கோடி) செலவில் உருவாகும் இந்த விமானத்தை பறக்கும் அரண்மனை என்று அழைக்கின்றனர்.

இந்த விமானம் கடந்த 2009ம் ஆண்டு விலைக்கு வாங்கப்பட்டு அரண்மனை போன்று மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் முடிந்து அடுத்த ஆண்டு (2013) டெலிவரி எடுக்கப்படுகிறது.

பறக்கும் அரண்மனை வடிவிலான இந்த விமானத்தில் 4 படுக்கைகள், மிகப் பெரிய அளவிலான படுக்கைகள் கொண்ட 5 அதி நவீன அறைகள், பிரார்த்தனை அறை, கம்ப்யூட்டர் வசதிகளுடன் கூடிய மீட்டிங் ஹால், ரோல்ஸ் ராயல்ஸ் கார் நிறுத்தும் சொகுசு அறை உள்ளிட்டவை உள்ளன.
இந்த தகவலை துபாயில் நடந்த விமானத்துறை மாநாட்டில் இளவரசரின் உதவியாளர் ஹபிப்பெகி தெரிவித்தார்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"