அமிலா எலிசபெத் டயர் (Amelia Elizabeth Dyer (1837 – 10 June 1896) என்ற ஆங்கிலப் பெண்மணி 400 குழந்தைகளை கழுத்து நெறித்து கொன்றுள்ளதாக விவரங்களை வெளியிட்டுள்ளார்கள். இவள் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைப் பார்த்து வந்தாள். 1770லிருந்து, 1934 வரை உள்ள தேசிய ஆவணக் காப்பகத்திலிருக்கும் தஸ்ஜாவேஜுகளை ஆய்ந்த போது, இந்த கோரமான, குரூரமான, பயங்கரமான விசயம் வெளிவந்துள்ளது.
இங்கிலாந்தில் முறை தவறிப் பிறக்கும் குழந்தைகள் 18-19வது நூற்றாண்டுகளில் அதிகமாகவே இருந்துள்ளது. அத்தகைய குழந்தைகளை வேறொருவருக்குக் கொடுத்துவிடவோ, தத்து கொடுக்கவோ அல்லது எப்படியாவது மறைக்கவோதான் தாய்மார்கள் நினைத்தார்கள். அத்தகைய சோரம் போன பெண்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆண்கள் பணக்காரர்களாக, வசதி படைத்தவர்களாக இருந்தால் £80 வரை விஷயத்தை காக்க வசூலிக்கப்பட்டது. £50 கெடுத்த ஆணினிடமிருந்து பெறப்பட்டது.
இத்தகைய குழந்தைகள் தாம் இந்த அம்மையாரிடம் சிக்கின, அவை ஒப்பியம் கொடுக்கப்பட்டு அமைதியாகக் கொல்லப்பட்டன. பிறகு பிணங்களை தேம்ஸ் நதியில் தூக்கியெறிந்தாள்.
நிறைய பேர்களுக்கு “நர்ஸ்” (Nurse) என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாமல் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் “நர்ஸ்” என்றால் குழந்தைகளை / மனிதர்களைக் கொல்பவள் என்றுதான் அர்த்தம். ஆங்கிலேயருக்கு, மேனாட்டவருக்கு, எப்பொழுதுமே தமக்கு பாதகமாக இருக்கும் விஷயங்களை மறைக்க, உண்மைகளை தலைகீழாக்கி சொல்வார்கள். அவ்விதமாகத்தான் இத்தகைய சொற்கள் உருவாகி அகராதியில் இடம் பிடித்தன.
மத்தியத்தரைக் கடல் நாடுகளில் வளர்ந்த நாகரிகங்களில், குழந்தையை பலி கொடுப்பது என்பது சாதாரணமான விஷயம். அதிலும் தலைப்பிள்ளையை, ஆண்பிள்ளையை பலி கொடுப்பது (sacrifice), ஒரு சிறப்பான சடங்காகக் கொண்டிருந்தார்கள். இந்நம்பிக்கை பிறகு யூத / கிருத்துவ மதங்களிலும் காணப்பட்டது. இருப்பினும், ஏசுகிருஸ்து பிறந்ததை ஏற்றுக் கொள்ளப்பட்டதால், கருச்சிதைவு(abortion) செய்து கொள்ளக் கூடாது என்று விதிக்கப்பட்டது. அதாவது, முறைதவறி கர்ப்பமுற்றாலும், குழந்தை வளர்க்கப்படவேண்டும், கொல்லப்படக்கூடாது என்ற எதிர்சித்தாந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதனால் தான் “கான்வென்ட்” (Convent) என்ற குழந்தைகள் வளர்க்கும், பாதுகாக்கும் மையங்கள், கிருத்துவ மடாலயங்கள் (Monastaries / abbots) அருகில் ஏற்படுத்தப்பட்டன. இத்தகைய மதநம்பிக்கைகளில் வளர்ந்தவர்கள்தாம் ஆங்கிலேயர்கள். இதனைப் பயன்படுத்திக் கொண்டுதான், அம்மையார் இப்படி குழந்தைகளை பலி கொடுத்துள்ளாள்!