பாடகியின் மார்பை பிடித்த சிறுவனின் புகைப்படத்தால் சர்ச்சை


ஜப்பானின் டொமொமி கசாய் என்ற பாடகி நிர்வாணமாக ஒரு சிறுவனுடன் எடுத்த புகைப்படத்தில் அந்த சிறுவன் பாடகியின் மார்பகங்களைப் பிடிப்பது போன்று போஸ் கொடுத்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் ஒரு இசைக்குழுவைச் சேர்ந்த பாடகி டொமொமி கசாய். 21 வயதாகும் டோமோமி கசாய் நிர்வாணமாக காட்சி தருகிறார். அவரது வெற்று மார்புகளை ஒரு சிறுவன் பின்னாலிருந்து தன் கைகளால் பிடித்திருக்கிறான்.

இந்தப் புகைப்படம் ஷுகான் யங் என்ற பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது. இதனால் கசாய் மீது வழக்குப் போடும் அளவுக்கு சர்ச்சை எழுந்துள்ளது. இந்தப் படத்தை சம்பந்தப்பட்ட பாடகியே தனக்குக் கொடுத்ததாக பத்திரிக்கை பதிப்பாளர் கூறியுள்ளார். இருப்பினும் இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் விரைவாக விசாரணையில் இறங்கினர். சம்பந்தப்பட்ட பத்திரிக்கை மீதும், பாடகி மீதும் சிறார் விபச்சாரத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது. ஜப்பானின் பிரபலமான பாடகியாக இருக்கும் கசாய், இந்தப் புகைப்படத்தால் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"