பெண்கள்தான் பொய்யான உச்சத்தைக் காட்டி செக்ஸ்உறவில் இன்பம் அடைகிறார்கள் என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. ஆனால் தற்போது ஆண்களும் கூட இந்த விஷயத்தில் நடிக்கிறார்களாம். ஒரு ஆய்வு சொல்கிறது.
கான்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். இவர்கள் மொத்தம் 180 கல்லூரி வயதையொத்த ஆண்களிடமும், 101 கல்லூரி வயதையொத்த பெண்களிடமும் செக்ஸ் பழக்கம் குறித்து கேள்விகள் கேட்டனர். அதில் 25 சதவீத ஆண்கள் உறவின்போது தாங்கள் பொய்யான முறையில் எழுச்சி அடைவது போல காட்டிக் கொள்வதாக கூறியுள்ளனர். அதேசமயம், பெண்களைப் பொறுத்தவரை பாதிப் பேர் பொய்யான உச்சத்தைக் காட்டுவார்களாம்.
ஏன் இப்படிப் பொய் சொல்கிறீர்கள்? என்று கேட்டபோது, தங்களது பார்ட்னர்கள் சந்தோஷப்பட வேண்டும், அவர்கள் முகம் சுளிக்கக் கூடாது, மனக் கஷ்டம் அடையக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்வதாக ஆண்கள் கூறியுள்ளனர். கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட அனைவருமே தாங்கள் அல்லது தங்களது பார்ட்னர் ஆகியோரில் ஒருவர் ஒவ்வொரு உறவின்போதும் ஆர்கஸம் வருவது போல காட்டிக் கொள்வது நிஜம்தான் என்று கூறியுள்ளனர்.
உடலுறவின்போதுதான் பெரும்பாலானோர் போலியான உச்சத்தை வெளிப்படுத்துகின்றனராம். அதாவது ஆண்களில் 70 சதவீதம் பேரும், பெண்களில் 80 சதவீதம் பேரும் போலியான உச்சநிலையைக் காட்டுகின்றனராம். சிலருக்கு உடலுறவின்போது உச்சநிலை ஏற்படுவதில் தாமதம் ஏற்படும்போது அவர்கள் சுய இன்பம் மூலம் உச்சநிலையை எட்டி பின்னர் உடலுறவைத் தொடர்வதாக கூறியுள்ளனர். உடலுறவில் இறங்கி விட்டாலே உச்ச நிலை வந்து விட வேண்டும் என்று பெரும்பாலானோர் கருதுகிறார்களாம். பலருக்கு அதுபோல நடப்பதில்லை என்பதால் போலியான உச்சநிலையை காட்டி உறவு கசந்து போய் விடாமல் பார்த்துக்கொள்கிறார்களாம்.