வசிய மருந்து கொடுத்து இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்த சாமியார்!

குமரி மாவட்டம், கருங்கல் பகுதியை சேர்ந்தவர் கீதா 25, பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் குளச்சலை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது.

தற்போது 2 வயதில் குழந்தை உள்ளது. இவரது கணவன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

கீதாவுக்கு அடிக்கடி உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. அவருக்கு தெரிந்த ஒருவர், அம்சியில் உள்ள சாமியாரிடம் சென்றால் நோய் குணமாகும் என கூறியுள்ளார்.

அவர் கூறியபடி கீதா அந்த சாமியாரை பார்க்க சென்று அவர் கொடுத்த பஸ்பம், தாயத்துகள் போன்றவற்றை வாங்கி வந்தார். சாமியார் கூறியபடி தனது பழக்க வழக்கங்களை மாற்றியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் கீதா மாயமானார். பெற்றோரும், உறவினர்களும் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.

அப்போது வீட்டில் கீதாவின் பர்ஸ் இருந்தது. அதில், சில செல்போன் எண்கள், தாயத்துகள், விபூதி இருந்தன. இதுகுறித்து அவர்கள் கருங்கல் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கீதாவை சாமியார் கடத்தி சென்ற தகவல் உறவினர்களுக்கு கிடைத்தது. அவர்கள் அங்கு சென்றபோது சாமியார் வீட்டில் ஒரு அறையில் கீதா அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

எதுவும் பேச முடியாமல், சுய நினைவின்றி இருந்தார். ஆத்திரமடைந்த உறவினர்கள், சாமியாரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் கருங்கல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சென்று கீதாவை மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், அருமனை பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர் மந்திரம் மூலம் நோய்களை தீர்ப்பதாக கூறி இளம்பெண்களை மயக்கி உல்லாசமாக இருந்துள்ளார்.

அந்த பகுதி மக்களுக்கு உண்மை தெரிய வரவே அங்கிருந்து அடித்து விரட்டியுள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பித்து வந்த வாலிபர், தேங்காப்பட்டணம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து மருத்துவம் செய்வதாக கூறி பெண்களை வசியம் செய்து வந்தது தெரியவந்தது.

காணாமல் போன கீதா கடந்த ஒரு மாதத்திற்கு முன் இதுபோல் காணாமல் போனார். 10 நாட்களுக்கு பின் திரும்பி வந்தார்.

அப்போதும் சாமியாரை பார்க்க சென்று விட்டு மயக்கம் தெளிந்த பின் திரும்பி வந்தது தெரியவந்தது.கீதாவைப் போல் பல பெண்களை சாமியார் வசியம் செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

சாமியாரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"