பெண்கள் தங்களை காத்துக்கொள்ள சில ஆலோசனைகள்


தன்னுடைய பெண்மையை காப்பாற்றிக்கொள்வதற்காக நடைபெறும் போராட்டத்தில் எதிராளியை கொலை செய்வது கூட குற்றமாகாது என்று சட்டம் சொல்கிறது. எனவே பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது பெற்றோர்களின் கடமை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

பள்ளி, கல்லூரிகளில், உறவினர்களிடத்தில் இருந்து பெண்களுக்கு எந்தமாதிரியாக பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்படும் என்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

பெண் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுவதோடு, அவர்களுக்கு எந்தமாதிரியான சிக்கல்கள் வரும் என்றும், அதை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் கற்றுக்கொடுக்கவேண்டியது அவசியம்.

எல்.கே.ஜியிலேயே சிக்கல்
பெண் குழந்தைகள் பருவ வயதை எட்டிய பின்னர்தான் சிக்கல் என்றில்லை. பிஞ்சுகளைக்கூட கசக்கி முகரும் மனித மிருகங்கள் இங்கு உள்ளனர். எல்.கே.ஜி சிறுமிகள் கூட பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். எனவே அவர்களுக்கு குட் டச், பேட் டச் எவை என்பதைப் பற்றி கற்றுத்தரவேண்டும்.

பள்ளி யூனிபார்ம் கவனம்
பெரும்பாலான பள்ளிகளில் குட்டைப் பாவாடைதான் அணிகின்றனர். இப்படிப்பட்ட சீருடைகள் பார்க்கவே விகாரமாக இருக்கும். அதை முடிந்த அளவு சுடிதாராக மாற்ற பள்ளி நிர்வாகிகளிடம் பேசுங்கள். சட்டை அல்லது சுடிதாரை அதிகமாக இறுக்கிப் பிடித்துத் தைக்காமல், லூசாக தைத்து அணியச் செய்யுங்கள்.

தனியாக அனுப்பாதீர்கள்
தெரிந்தவர்தானே என்று தனியாக எந்த ஒரு ஆணுடனும் உங்கள் பெண்ணை வெளியே அனுப்பாதீர்கள். ஒருவேளை செல்ல நேர்ந்தால் எச்சரிக்கை செய்து அனுப்புங்கள். பெண் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே இறங்கினால் கண்களை உறுத்தாத உடைகளை அணிந்து வெளியே செல்ல அனுமதியுங்கள்.

உறுத்தாத உடைகள் அவசியம்
பத்து வயதிலேயே பெண் குழந்தைகள் இன்றைக்கு பூரிப்பாக இருப்பார்கள். எனவே எக்காரணம் கொண்டும் நாகரீகம் எனும் பெயரில் கண்ட உடைகளை அணிய வேண்டாம். அதுவே பிறரின் கண்களை உறுத்தும்.

அறிமுகம் இல்லாதவர்கள்
அறிமுகம் இல்லாத ஆண்களிடம் பேசவேண்டாம். பிறந்த நாள் போன்ற விழாக்களுக்கு தோழிகளின் வீட்டிற்குச் செல்ல நேர்ந்தால் வீட்டில் உள்ள பெரியவர்கள் துணையாகச் செல்லலாம்.

ஆண் நண்பர்கள் அவசியமா?
இருபாலர் படிக்கும் பள்ளி என்றால் ஆண்களுடன் பேசாமல் இருக்கமுடியாது. எதற்கும் ஒரு எல்லை உண்டு என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள். எந்த ஒரு முகம் அறியா ஆண் மகனின் போன் நம்பர் மற்றும் விவரங்களை அறிந்து கொள்ள அவசியமில்லை என்பதை தெரிவியுங்கள்.

கல்லூரி பெண்கள் கவனத்திற்கு
பேருந்து நிறுத்தங்களில் தனியாக இருக்க நேர்ந்தால் யார் கூப்பிட்டாலும் போக வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள். தவிர்க்க முடியாமல் கடற்கரை மற்றும் பூங்கா ஆகிய பகுதிகளுக்கு தனியாக செல்ல வேண்டி நேர்ந்தால் இருட்டும் முன் வீடு வந்து சேரவேண்டும் என்று அறிவுறுத்துங்கள்.

ஆயுதங்கள் அவசியம்
பெண்மைக்கு ஆபத்து வரும்போது பற்களையும், நகங்களையும் ஆயுதங்களாக பயன்படுத்தலாம் என்று மகாத்மாக காந்தியடிகளே கூறியுள்ளார். எனவே உங்கள் பெண் குழந்தையின் கைப்பையில் எப்போதும் ஒரு மடக்கு பேனா கத்தியும், ஒரு பொட்டலத்தில் சிறிது மிளகாய்த்தூள் டப்பாவும் இருக்கட்டும். கழுத்துச் செயினில் ஊக்கு, அதாவது சேப்டி பின் மாட்டியிருந்தால் அதை கூட ஆயுதமாய் பயன்படுத்தச் சொல்லுங்கள்.

கடிப்பது தப்பில்லை
என்னதான் தற்காப்பு நடவடிக்கைகளை கொண்டிருந்தாலும் கயவனிடம் தனியாக மாட்டிக்கொண்டால் தைரியமாக எதிர்த்து போராடவேண்டும் என்று உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள். கூடுமான வரை மிகப் பெரிய குரலில் கூச்சலிடலாம். வாயைப் பொத்தினால் பலம் கொண்ட மட்டும் நல்லா கடிச்சு வையுங்க.

கொலை கூட செய்யலாம்
ஆணின் உயிர்குறியை மையமாக வைத்து தைரியமாக தாக்கலாம். அங்கு அடிபட்டால் அவனால் செயல்பட முடியாது என்று உணர்த்துங்கள். எந்த ஒரு ஆயுதமாக இருந்தாலும் அதை வைத்து தாக்கலாம். போராட்டத்தில் அவன் மரணமடைந்தால் சட்டப்படி அது தவறில்லை என்று உங்கள் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"