355000 ஆண்களுடன் உறவு கொண்ட விபச்சார இரட்டையர்கள்

கடந்த 50 வருடமாக, அதாவது தங்களது 20 வயது முதல் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இரட்டையர் சகோதரிகள், தங்களது 70வது வயதில் விபச்சாரத் தொழிலிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இவர்கள் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்தவர்கள்.

இருவரும் இதுவரை 3 லட்சத்து 55 ஆயிரம் ஆண்களுடன் உறவு கொண்டுள்ளனர் என்பது மலைக்க வைக்கும் தகவலாக உள்ளது.

இவர்களின் பெயர் லூயிஸ் போக்கன் மற்றும் மார்ட்டின் போக்கன். இருவரும் ஆம்ஸ்டர்டாமின் சிவப்பு விளக்குப் பகுதியில்மிகவும் பிரபலமானவர்கள். விஐபி விபச்சாரப் பெண்களாகவலம் வந்தவர்கள் ஆவர். இப்போது உடல் நிலை மற்றும் வாடிக்கையாளர் குறைவு காரணமாக ஓய்வு பெற்றுள்ளனர்.

லூயிஸும், மார்ட்டினும் ஆம்ஸ்டர்டாம் நகரிலேயே மிகவும் வயதான, மூத்த விபச்சாரத் தொழிலாளர்கள் ஆவர். இவர்கள் இருவரும் அரசின் பென்ஷன் பெறுவதற்கும் தகுதி பெற்றவர்கள் ஆவர்.

இருவரும் கடந்த 50 வருடங்களாக விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இருவரும் மிகவும் பிசியான தொழிலாளர்களாக இந்த காலகட்டத்தில் இருந்துள்ளனர்.

இருவரும் தங்களது 20வது வயதில் விபச்சாரத்தில் குதித்தனர். நெதர்லாந்தில் விபச்சாரம் அங்கீகரிக்கப்பட்ட தொழில் என்பதால் இருவரும் இந்தத் தொழிலைத் தேர்வு செய்து அதில் ஈடுபட்டனர்.

50 ஆண்டு கால விபச்சார தொழிலில் இருவரும் சேர்த்து மொத்தமாக 3 லட்சத்து 55 ஆயிரம் ஆண்களுடன் உறவு கொண்டுள்ளனர்.

இதுகுறித்து இரு சகோதரிகளும் கூறுகையில், விபச்சாரம் முன்பு போல இல்லை. ஆம்ஸ்டர்டாமின் சிவப்பு விளக்குப் பகுதியில் இப்போது முரடர்கள் அதிகமாகி விட்டனர். அவர்களை சமாளிப்பது கடினமாக உள்ளது. வலி மிகுந்த தொழிலாக இது மாறியுள்ளது என்றார்கள்.

இரு சகோதரிகளையும் வைத்து கடந்த ஆண்டு மீட் தி போக்கன்ஸ் என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் எடுக்கப்பட்டது. அதில் இருவரும் நடித்து தங்களது அனுபவங்களைத் தெரிவித்தனர்.

சகோதரிகளில் லூயிஸுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். அவருக்கு ஆர்த்தரைடிஸ் பிரச்சினை வந்ததும் கூட ஓய்வு பெறும் முடிவுக்கு முக்கியக் காரணமாம். இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு மூட்டு வலி வந்து விட்டது. இதனால் முன்பு போல இயங்க முடியவில்லை. கஷ்டமாக இருக்கிறது என்கிறார்.

3 குழந்தைகளுக்குத் தாயான மார்ட்டின் ஓய்வு பெறும் முடிவுக்கு வேறு காரணம் கூறுகிறார். அதாவது வாடிக்கையாளர்கள் முன்பு போல வருவதில்லையாம், குறைந்து விட்டனராம். இதனால்தான் ஓய்வு பெறுகிறாராம்.

இதுகுறித்து மார்ட்டின் கூறுகையில், எங்களுக்கு முன்பு போல வாடிக்கையாளர்கள் வருவதில்லை. ஒரே ஒரு முதியவர்தான் தொடர்ந்து வருகிறார். நான் அவரை மதிக்கிறேன். நீண்ட காலமாக அவர் எனது வாடிக்கையாளராக இருக்கிறார்.

அவரை நிறுத்த எனக்கு விருப்பமே இல்லை. வாராவாரம் அவர் வந்து விடுவார். ஏதோ ஞாயிற்றுக்கிழமையானால் சர்ச்சுக்குப் போவது போல மிகச் சரியாக வந்து விடுவார் என்றார் புன்னகைத்தபடி.

2000மாவது ஆண்டில் நெதர்லாந்தில் விபச்சாரம் சட்டபூர்வ தொழிலாக அங்கீகரிக்கபப்ட்டது. ஆனால் தொழில் சட்டபூர்வமானாலும் கூட விபச்சாரப் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை, மேம்படவில்லை என்று வருத்தமாக கூறுகின்றனர் இந்த சகோதரிகள்.

இதுகுறித்து மார்ட்டின் கூறுகையில், வெளிநாட்டுப் பெண்களுக்கு எங்கள் சட்டம் மிகவும் சாதகமாக உள்ளது. ஆனால் உள்ளூர் பெண்களை அது புறக்கணிக்கிறது என்றார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"