96 பையன்களை கற்பழித்த வியாபாரி!


விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் இந்தோனேசியர் ஒருவர் 96 பையன்மாரை கற்பழித்தமையை ஒப்புக் கொண்டு உள்ளார்.

இவரின் வயது 34. பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனின் பெற்றோர் மேற்கொண்டு இருந்த முறைப்பாட்டை அடுத்து இவர் ஜகார்த்தாவில் வைத்து கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

சிறுவனை இவ்வியாபாரி கடத்திச் சென்று 45 நாட்கள் தடுத்து வைத்து இருக்கின்றார் என்றும் அந்நாட்களில் பல தடவைகள் தொடர்ச்சியாக வல்லுறவு வைத்துக் கொண்டார் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அத்துடன் இச்சிறுவனை வேறு ஆட்களுடனும் பலாத்காரமாக செக்ஸில் ஈடுபடுத்தினார் என்றும் இம்முறைப்பாட்டில் கூறப்பட்டு உள்ளது.

13 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட 96 பையன்மாரை கடந்த இரு வருடங்களுக்கு இடையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி இருக்கின்றார் என இவ்வியபாரி பொலிஸாருக்கு தெரிவித்து உள்ளார்.

இவர் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்படும் பட்சத்தில் குறைந்தது 15 வருட கால சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"