பேட்டரி என்று சொன்னவுடன் குறிப்பட காலம் பயன்படுத்தி விட்டு தூக்கி ஏறியும் நமக்கு இது எப்படி வேலை செய்கிறது. புதிதாக நாமும் ஒரு பேட்டரி எப்படி உருவாக்கலாம் ? , பேட்டரியின் தரத்தை நீண்ட நாட்கள் நீடிப்பதற்கு என்னவெல்லாம் கையாள வேண்டும் என்று சொல்லி நமக்கு உதவுவதற்காக பேட்டரி பழ்கலைக்கழகம் என்று ஒரு தளம் உள்ளது.
இந்ததளத்திற்கு சென்று நாம் பேட்டரி பற்றிய அனைத்து அரிய செய்திகளையும் அன்று முதல் இன்று வரை பேட்டரி எப்படி மாற்றம் பெற்று வந்திருக்கின்றது என்று உடனுக்கூடன் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு படியாக நமக்கு பேட்டரி எப்படி வேலை செய்கிறது என்பதை இரசாயனவியலுடன் கலந்து தெளிவாக எடுத்துச்சொல்கிறது.
ரீசார்ச் பேட்டரி என்றால் எப்படி கையாள வேண்டும் அதில் அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகள் என்ன என்பதையும் பட்டியலிட்டு நமக்கு காட்டுகிறது. புதிதாக நாம் பேட்டரி உருவாக்க விரும்பினாலும் இந்தத்தளம் எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லி உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.batteryuniversity.com