கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தேர்ப்பேட்டை, மேல்தெருவை சேர்ந்தவர் கண்ணப்பன், இவரது மகன் பாபு வயது-25, கட்டிட தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
தனக்கு திருமணம் செய்யவேண்டும் என்று பெற்றோரிடம் பெண் பார்க்க சொல்லி வற்புறுத்தி வந்துள்ளார். பெண் சரியாக அமையாததால் அவருக்கு திருமணம் செய்து வைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
திருமணம் ஆகாத காரனத்தால் கடந்த சில வாரமாக பாபு மனமுடைந்த நிலையில், ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே சுற்றி திரிந்துள்ளார். நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த பாபு, பிளேடால், அவரது கழுத்தை கீறி தற்கொலைக்கு முயன்றார்.
அவரிடம் இருந்த பிளேடை வைத்து கழுத்தில் பலமாக வெட்ட முடியாததால், தற்கொலை கூட தன்னால் செய்ய முடியவில்லை என ஆவேசமடைந்த பாபு, திடீரென்று தன் பிறப்பு உறுப்பை அந்த பிளேடால் வெட்டிக்கொண்டார்.
இதனால், பிறப்பு உறுப்பில் இருந்த நரம்பு துண்டானதால், ரத்தம் பீறிட்டு வெளியேறியது. வலி தாங்க முடியாமல் பாபு அலறியுள்ளார். வலியால் அவர் போட்ட சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் பதறியடித்து அவரது வீட்டை வந்து எட்டிபார்த்தபோது, பாபுவின் பிறப்பு உறுப்பை வெட்டியது கண்டு அதிர்ச்சி யடைந்தனர்.
உடனடியாக பாபுவை தூக்கிக்கொண்டு வந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.