பி.டி.எப். பைல்களை எடிட் செய்ய மென்பொருள்


போர்டபிள் டாகு மெண்ட் பைல் என அழைக்கப்படும் இவை கம்ப்யூட்டர் பயனாளர்கள் அனைவரும் விரும்பும் ஒரு வகை ஆகும்.

சில வேளைகளில் நாம் ஒன்றுக்கு மேற்பட்ட பி.டி.எப். பைல்களை இணைக்க விரும்பு வோம். அல்லது ஒவ்வொரு பைலில் இருந்தும் சில பகுதிகளை எடுத்து புதிய பைலாக அமைக்க விரும்புவோம்.

இதற்கு நமக்கு அதன் சோர்ஸ் எனப்படும் மூல பைல் தேவைப்படும். அவை இல்லாத போது, பிரிவுகளை இணைக்க இயலாமல், ஒவ்வொன்றையும் புதிய பைல் போன்று டைப் செய்திட முயற்சிப்போம். இந்த சிக்கலைத் தீர்க்க இந்த மென்பொருள் உதவுகிறது.

பி.டி.எப். பைல்களைக் கையாள ஓப்பன் சோர்ஸ் முறையில் அமைக்கப்பட்ட புரோகிராம் இது. இது 145 கேபி அளவிலான சிறிய எக்ஸிகியூட்டபிள் பைல். போர்ட்டபிள் வகையாக இதனைப் பயன்படுத்தலாம். டாட் நெட் பிரேமில் செயல்படுகிறது.

இந்த புரோகிராமினை இயக்கிவிட்டு, பி.டி.எப். பைல்களை ட்ராக் அண்ட் ட்ராப் முறையில், இழுத்துச் சென்று இந்த புரோகிராமின் லிஸ்ட்டில் விட்டுவிடலாம்.

எத்தனை பி.டி.எப். பைல்களை வேண்டுமானாலும், மொத்தமாகப் பட்டியலிட்டு இணைத்து ஒரு பைலாக மாற்றலாம். குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் ஒவ்வொரு பைலிலும் தேர்ந்தெடுத்து இணைக்க விரும்பினாலும், இந்த புரோகிராம் அதற்கான வழிகளைத் தருகிறது.

மென்பொருளை இலவசமாக தரவிறக்க கீழே சொடுக்கவும்



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"