பாலியல் பிரச்சினைக்கு இமெயிலில் அட்வைஸ்!


பாலியல் பிரச்சினைப் பற்றி பேசாத ஊடகங்கள் இல்லை. நாளிதழ்கள் தொடங்கி இணையதளங்கள் வரை ஏதாவது ஒரு வடிவத்தில் யாராவது அட்வைஸ் செய்து எழுதியிருப்பார்கள். தொலைக்காட்சிகளில் இதற்காகவே ஸ்லாட் எடுத்து வாலிப வயோதிக அன்பர்களே என்று பேசி இம்சை செய்வார்கள். படுக்கை அறையில் சின்னதாய் ஒரு சிக்கல் என்றாலும் இதனால் இருக்கலாமோ, அதனால் இருக்கலாமோ என்றெல்லாம் யோசித்து மண்டை குழம்பி லாட்ஜில் ரூம் போட்டிருக்கும் சித்த வைத்தியரை தேடிப்போய் காசு செலவழித்து விட்டு வருவார்கள்.

இதை விட அட்வான்ஸாக இப்போது இமெயில் மூலமும் தொலைபேசி மூலமும் பாலியல் பிரச்சினைக்கு அட்வைஸ் கேட்க ஆரம்பித்துவிட்டனராம். மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்களும், இந்திய துணைக்கண்டத்தை சேர்ந்தவர்களும்தான் பெரும்பாலும் இமெயில் மூலம் எழுச்சி பிரச்சினை, இயலாமை போன்றவைகளுக்கு அட்வைஸ் கேட்கின்றனராம்.

இது தொடர்பாக இங்கிலாந்தில் மேற்கொண்ட ஆய்வில் மூன்றில் இரண்டு ஆண்கள் தங்களின் பாலியல் பிரச்சினைகளுக்காக இ மெயில் மூலம் தொடர்பு கொள்கின்றனர். 2009 முதல் 2010ம் ஆண்டு காலத்தில் மட்டும் இங்கிலாந்தில் உள்ள பாலியல் நிபுணர்களிடம் 5,531 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. மேலும் 2,160 பேர் இ மெயில் மூலம் பாலியல் பிரச்சினைகளைப் பற்றி தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் 21 வயது முதல் 30 வயது வரை உடைய ஆண்கள் மட்டுமே பாலியல் பிரச்சினை குறித்து இ மெயில் மூலம் ஆலோசனை பெற அணுகியுள்ளனர்.இதில் 69 சதவிகிதம் பேர் எழுச்சியின்மைக்காகவும், 17 சதவிகிதம் பேர் செக்ஸ் கிளர்ச்சியின்மைக்காகவும், 12 சதவிகிதம் பேர் விந்து முந்துதல் பிரச்சினைக்காகவும், 10 சதவிகிதம் பேர் சுயஇன்பப் பிரச்சினைக்காகவும் ஆலோசனைக் கேட்டு இமெயில் அனுப்பியுள்ளனர்.

இதில் 673 இமெயிலில் மிகவும் சிக்கலான செக்ஸ் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆண்கள் தங்களில் செக்ஸ் பிரச்சினைகளை வெளியில் சொல்வதில்லை. ஒருசிலர் மட்டுமே தைரியமாக முன்வந்து ஆலோசனை பெற்றுக்கொள்கின்றனர் என்கிறார் பாலியல் மருத்துவ நிபுணர் டாக்டர் ஜான் தாம்சன்.

இன்றைக்கு 31 முதல் 40 வயது வரை உடைய ஆண்களுக்கு அதிக அளவில் விந்து முந்துதல் பிரச்சினை இருக்கிறது என்று பாலியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். அதேபோல் 41 முதல் 50 வயது வரை உடைய ஆண்களில் பெரும்பாலோனோர் எழுச்சியின்மை பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கின்றனர் ஆய்வாளார்கள்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"