"குரங்குப்பெண்ணும் முதலை மனிதனும்" விசித்திர தம்பதியர் .! (வீடியோ இணைப்பு)


“குரங்குப்பெண்” :-
பெயாமொன் என்ற நாட்டில் 1911 ஆம் ஆண்டு ஏப்ரல் 26ம் திகதி பிறந்தவர் “பெர்சில்லா ரோமன்” என்கின்ற பெண். இவர் அக்காலகட்டத்தில் “குரங்குப்பெண்” என அனைவராலும் அறியப்பட்டவர் அழைக்கப்பட்டவர். காரணம். இவரது உடல் முழுவதும் உரோமங்களால் மூடப்பட்டிருந்தது. ஒரு பெண்மைக்குரிய அடையாளங்கள் அற்று முகத்திலும் மீசை மற்றும் தாடி வளர்ந்திருந்தது.

சிறு வயதில் இருந்து இவருக்கு அதீத உரோம வளர்ச்சி இருப்பதை கண்ட பெற்றோர்கள் இவரை குணப்படுத்த முடியுமா என அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்திற்கு பயணம் மேற்கொண்டார்கள். அங்கு இவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆறு மாதங்கள் தங்கியிருக்க வேண்டும் என குறிப்பிட்டார்கள்: இறுதியில் டாக்டர்களால் இவரை முற்றாக குணப்படுத்த முடியவில்லை.

எனினும் நம்பிக்கை இழந்த இவரது தந்தை இவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது சாகசவித்தை காட்டும் ஒருவரிடம் குழந்தையை ஒப்படைத்தார். பின்னர் இவருக்கு 6 வயதாகும் போது தந்தை இறந்துவிட சர்கஹ் வித்தைக்காரர்கள் இவரை வளர்க்கத்தொடங்கியுள்ளார்கள். அங்கு குரங்குப்பெண்ணாக வித்தை காட்டி பிழைப்பு நடத்தி வந்தார் இப்பெண். இதன் மூலம் குரங்குப்பெண்ணாக இவர் பிரபல்யமடைந்தார்.

காலங்கள் ஓடியது இவரது வாழ்வில் சற்று வசந்தம் வீசத்தொடங்கியது. அங்கு தன்னுடன் சர்கஸ் வித்தை காட்டி அமெiரிக்காவைச்சேர்ந்த ஒரு இளைஞனுடன் காதல் மலர்ந்தது. குறிந்த இளைஞனும் சாதாரண ஒருவர் அல்ல என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சரி வாங்க அடுத்த அதிர்ச்சிக்கு உங்களை அழைத்து செல்கிறோம்….

“முதலை மனிதன்” :-
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் 23- 1914ம் ஆண்டு பிறந்தார் “எம்மிட் பெயானோ” என்பவர். இவர் அமெரிக்காவில் சர்கஸ்வித்தை காட்டி வந்தார். இவரது தாயும் தந்தையும் இவர் பிறந்த பின்னர் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டதால் இவர் சர்கஸ்தான் வாழ்க்கை என இருந்தார். இவரது உடலில் தோல் இயற்கைக்கு மாறாக முதலைத்தோல் போன்று செதில்களாக காணப்பட்டது. எனவே இவர் அக்காலகட்டத்தில் அனைவராலும் “முதலை மனிதன்” என அழைக்கப்பட்டார்.

முதலை மனிதன்- குரங்கு பெண் திருமணம் :- 
முதலை மனிதனுக்கும் குரங்குப்பெண்ணும் இடையில் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது. இதன் அடையாளமாக ஒரு வருடம் கழித்து பெர்சில்லா ரோமன் ஒரு பெண் குழந்தையை பிரசவித்தார். எனினும் அது நீண்ட நாட்கள் இவ்வுலகில் வாழ கொடுத்துவைக்கவில்லை. நோயால் குறித்த குழந்தை இறந்து போனது.

விசித்திர பிறவிகளின் பிரிவு :- 
சர்கஸ் வித்தை காட்டியோ தமது வாழ்க்கையை நடத்திகொண்டிருந்த இந்த விசித்திர ஜோடிகளின் வாழ்க்கையின் அத்தியாயம் முடியும் காலமும் வந்தது. 1995 இல் பெர்சில்லா இவ்வுலகிற்கு விடை கொடுத்தார். அதனை தொடர்ந்து 2001 இல் எம்மிட் பெயானோவும் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"