என் கருவில் இருந்த குழந்தையை களவாடிட்டாங்க! வித்தியாசமான வழக்கு!!


பிரேசில் நாட்டில் லெனின் சன்டோஸ் என்னும் 19 வயதுப் பெண்ணின் சிசு, கருவிலேயே களவாடப்பட்டுள்ளது. 38 வார கர்பிணியான இப் பெண் பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். குறிப்பிட்ட பெண் மயக்கமடைந்த நிலையில் இருந்து மீண்ட வேளை, உங்கள் வயிற்றில் குழந்தை இருக்கவில்லை.

உங்கள் வயிறு மட்டுமே வீங்கி இருந்திருக்கிறது. நீங்கள் குழந்தையை
வயிற்றில் சுமப்பதாக நினைத்திருக்கின்றீர்களே தவிர, அப்படி எதுவும் இல்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்கள். லெனின் சன்டோஸ் என்னும் இப் பெண் ஆடிப்போயுள்ளார். இப் பெண் சில மாதங்களுக்கு முன்னரே அல்ரா ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அவர் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்று அவ்வூர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அதுமட்டுமல்லாது, அவரும் அவரது கணவரும் குழந்தைக்கு பெயர் கூட வைத்து உடுப்புகளையும் வாங்கிவைத்துள்ளார்கள். பிரசவ வலி எடுத்த நேரத்தில் தனக்கு குருதிப் பெருக்கும் இருந்ததாகக் குறிப்பிடும் இப் பெண், தான் வைத்தியச்சலைக்குச் சென்ற பின்னர் என்ன நடந்தது என்று தனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார். மயக்க ஊசியை அடித்து, கருவில் உள்ள சிசுவை அகற்றி, பின்னர் அவர் கர்ப்பம் தரிக்கவே இல்லை என்று மருத்துவர்கள் கூறுவது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தான் கருவுற்று தான் இருந்தேன் என்று நிரூபிக்கவேண்டிய கடைப்பாட்டில் இப்பெண் இருக்கிறார்.

குறிப்பிட்ட மருத்துவமனை வட்டாரம் ஏன் இவ்வாறு கூறுகிறது என்பது தெரியாமல் பிரேசில் போலிசார் தலையை பிய்க்கும் நிலை தோன்றியுள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"