செக்ஸ் உறவில் பெண்களின் மனநலம் எப்படி இருக்கும் ?


ஒவ்வொருவருக்கும் 'ஆப்சென்ஸ் ஆப் மைன்ட்' இருப்பது சாதாரண விஷயம். ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் மனது அந்த வேலையிலிருந்து டக்கென விலகி வேறொன்றில் மூழ்கி விடும்.

இது செக்ஸ் உறவின்போது கூட நிகழ்கிறது. செக்ஸ் உறவில் ஈடுபட்டிருக்கும்போது ஒவ்வொருவரின் மனதிலும் அதைத் தவிர வேறு சில மன ஓட்டங்களும் இருக்கிறதாம். குறிப்பாக பெண் களுக்கு அது சற்று கூடுதலாகவே இருக்குமாம்.

இதுகுறித்து ஒரு கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளனர் இங்கிலாந்து ஆய்வாளர்கள். நீங்கள் செக்ஸ் உறவில் ஈடுபட்டிருக்கும்போது எந்த நினைவில் இருப்பீர்கள் என்று பெண்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் சொன்ன பதிலில் சுவாரஸ்யமான பல விஷயங்கள் கிடைத்துள்ளன.

34 வயது பெண் ஒருவர் கூறுகையில், எனது தோழிகள் பலரும், அவர்கள் செக்ஸ் உறவில் ஈடுபட்டிருக்கும்போது எந்த நினைவில் இருப்பார்கள் என்பதைக் கூறுவது வழக்கம். சிலர் இதை முடித்து விட்டு அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிப்பார்களாம். சிலரோ, துணிகளை துவைக்க வேண்டியது குறித்து நினைத்துக் கொண்டிருப்பார்களாம். இன்னும் சிலர் மளிகை சாமான்கள் வாங்குவது குறித்து சிந்திப்பார்களாம்.

சில பெண்களுக்கு மனதில் தாங்கள் வரித்து வைத்துள்ள ஆண்களின் நினைவுகள் வந்து போகுமாம். இதுகுறித்து ஒரு பெண் கூறுகையில், நான் எனது கணவரை மிகவும் நேசிக்கிறேன். இருப்பினும் உறவின்போது அவரைத் தவிர வேறு சில ஆண்களும் கூட எனது மனதில் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை. அவர்கள் நான் சிறு வயது முதல் பார்த்து, நேசித்தவர்கள். இதனால் அவர்கள் எனது மனதில் வந்து போகிறார்கள். இருந்தாலும் அவர்களை நான் நேரில் பார்த்தது கிடையாது என்றார்.

51 வயதான ஒரு பெண் கூறுகையில், எனக்கு இரண்டு முறை கல்யாணமாகியுள்ளது. நிறைய காதலர்களும் இருந்தார்கள். நான் படுக்கையில் இருக்கும்போது அந்தக் காதலர்களின் நினைவு வருவது வழக்கம். அதேபோல டிபார்ட்மென்டல் ஸ்டோருக்குப் போவது குறித்தும் நான் அந்த சமயத்தில் திட்டமிடுவது வழக்கம். மேலும் எனது வீட்டில் எத்தனை ஷூக்கள் உள்ளது என்பதையும் நான் மனதுக்குள்ளாகவே கணக்கிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளேன் என்கிறார்.

சில பெண்களுக்கு தங்களுக்குப் பிடித்த சினிமா ஸ்டார்களின் நினைவு வருமாம்.

இது இங்கிலாந்துக் கணக்காக இருக்கலாம். இருப்பினும் செக்ஸ் உறவின்போது வேறு சில சிந்தனைகளிலும்பெண்கள் மற்றும் ஆண்கள் ஈடுபடுவது சாதாரணம்தான் என்கிறார்கள் மன நல நிபுணர்கள்.

சில நேரங்களில் கணவர்களுடனான உறவு பெண்களுக்குக் கசந்து போக இத்தகைய மாறுபட்ட சிந்தனைகளும் காரணமாகி விடுவதாகவும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

மனதொத்த உறவின் மூலம்தான் ஆணும், பெண்ணும் முழுமையான அன்பையும், இன்பத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும். மாறாக இதுபோன்ற வேறு பாதைகளில் சிந்தனகைள் திரும்பும்போது அது கசப்பான விளைவுகளுக்கான ஆரம்ப கட்டமாகவே கருதப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"