முத்தங்களின் அர்த்தம் தெரியுமா?


காதலின் முதல் மொழி முத்தம். நம் அன்பிற்குரியவர் நம்மீது கோபத்தோடு இருந்தால் கூட ஒரு முத்தத்தின் மூலம் கோபத்தை மாற்றிவிடலாம். முத்தமிடும் இடம் எங்கு என்பதைப் பொருத்து அதன் அர்த்தங்களும் மாறுகின்றன. உங்களின் எண்ணத்தை வெளிப்படுத்தும் சங்கேத பாஷையாகக் கூட முத்தத்தை பயன்படுத்தலாமாம்.

காதலர்கள் அதிக அளவில் முத்தமிட நினைக்கும் இடம் உதடுகள் உதட்டில் முத்தமிட்டால் நான் உன்னை நேசிக்கிறேன் என்று அர்த்தமாம்.

கைகளில் முத்தமிட்டால் நான் உன்னை பக்தியுடன் வணங்குகிறேன் என்று அர்த்தமாம்.

கண்ணத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி என்று பாரதியாரே பாடியிருப்பார். ஆனால் கண்ணத்தில் முத்தமிட்டால் நான் உன்னுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தமாம்.

நாசியின் மீது முத்தமிட்டால் நீ ரொம்ப அழகா இருக்கே என்று அர்த்தமாம். கழுத்தில் முத்தமிட்டால் நீ எனக்கு வேண்டும் என்று அர்த்தமாம். அதே சமயம் காதின் மீது முத்தமிட்டால் சும்மா வேடிக்கைக்காக முத்தமிட்டேன் என்று அர்த்தமாம்.

கண் இமைகளின் மீது முத்தமிட்டால் உன்னுடன் நான் எப்பொழுதும் இருக்க விரும்புகிறேன். நெற்றியின் மீது முத்தமிட்டால் நான் உன்னை மதிக்கிறேன் என்றும் நீ எனக்கு வேண்டும் என்றும் அர்த்தம் கொள்ளலாமாம்.

அப்புறம் நம் நேசத்தைப் பொருத்து நாம் நேசிப்பவர்களைப் பொருத்து எங்குவேண்டும் என்றாலும் முத்தமிட்டுக் கொள்ளலாமாம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"