விசித்திர “ஆந்தை மனிதன்”


ஜெர்மனி நாட்டில் பிறந்த “Martin Laurello”அல்லது “Martin Emmerling” என்ற பெயரால் அழைக்கப்பட்ட ஒருவர் காலப்போக்கில் “ஆந்தை மனிதன்” என பிரபல்யம் பெற்றார். இதற்கு காரணம் என்ன தெரியுமா? அவர் ஆந்தையின் தோற்றத்தில் இருந்தார் என நினைத்துவிடாதீர்கள். மாறாக வினோதமான ஒரு செயலை செய்யும் ஆற்றலை அவர் கொண்டிருந்தார்.

இவர் தனது கழுத்தை 180 பாகையில் திருப்ப வல்லவர். இதன் காரணமாகவே இவர் “ஆந்தை மனிதன்” என அழைக்கப்பட்டார். இவருடைய இந்த அரிய செயலுக்கு காரணம் மரபணு குறைபாடுகள் எனப்படுகிறது. இவ்வாறான செயல் மிகவும் ஆபத்தானது மட்டுமின்றி உயிரை பறிக்க கூடிய செயலும் கூட.

ஆனால் இவரோ இத்திறனை பயன்படுத்தி அதனை தொழிலாக செய்து வந்தார். அதாவது கேளிக்கை நிகழ்வுகளின் போது தனது கழுத்தை முற்றிலுமாக பின்புறம் திருப்பி பார்வையாளர்களை பரவசப்படுத்தினார். 1921ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் இவ்வாறான வித்தைகள் காட்டி வந்த இவர் தன்னைப்பற்றிய குறிப்புகளை இணைய ஊடக நிறுவனம் ஒன்றுக்கு 1945 இல் அனுப்பி வைத்திருந்தார்.

பின்னர் இம்மனிதர் ஒரு நாஜி ஆதரவாளர் என வதந்திகள் பரவியது. இதனால் இவருடன் இருந்த சக நண்பர்கள் இவரை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விலக தொடங்கியுள்ளார்கள். இறுதியில் இவருக்கு என்ன நடந்தது இவர் எப்படி எங்கு இறந்தார் என்பது மர்மாகவே உள்ளது. இது பற்றிய தகவல் யாருக்கும் இதுவரை சரியாக தெரிவில்லை. எனினும் இவர் 1950 இல் இறந்துவிட்டார் என்று ஒரு வதந்தி நிலவுகிறது.



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"