ரகசிய கேமராவில் சிக்கும் குடும்ப பெண்கள்


சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா இன்றைக்கு இல்லாத வர்த்தக நிறுவனங்களே கிடையாது. சமீபத்தில் சென்னையில் ஆட்டோ டிரைவர் ஒருத்தரை கொலை செய்த கொலையாளியை சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராதான் அடையாளம் காட்டியது.

வர்த்தக நிறுவனங்களில் கொள்ளை மற்றும் சிறு திருட்டுகளில் ஈடுபடுபவர்களை அடையாளம் காட்டுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் இந்த கேமராவை தற்போது மனைவிகளை வேவுபார்க்க வீடுகளில் சில கணவர்கள் வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனைவி, ""நாங்க ரொம்ப வசதியானவங்க. அவர் ஷிப் மூலம் எக்ஸ்போர்ட் மற்றும் கமிஷன் கான்ட் ராக்ட் பிசினஸ் செய்து வருகிறார். மாசத்துக்கு குறைந்தது 2 முறையாவது பிசினஸ் சம் பந்தமாக வெளிநாடு போவார். எனக்கும் அவருக்கும் 15 வயசு வித்தியாசம். தற்போது எனக்கு 45 வயசாகுது. எங்களுக்கு இதுநாள் வரையிலும் அந்த விஷயத்தில் குறைவே யில்லை. அவர் சந்தேக பேர்வழி என்றாலும் பிறருக்கு உதவும் குணமுடைய ஒரு நல்ல மனிதர்தான்.

பின்னால் எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதற்காக வீட்டுக்குள் வெளி ஆட்கள் வருவதையே தவிர்ப்பார். அவர் வீட்டில் இல்லாதபோது சொந்தக்காரர்கள் முதல் எந்த ஆட்கள் வந்தாலும் -அவர் வெளிநாட்டில் இருந்தாலும் வந்தவர்கள் பற்றி உடனே போன் மூலம் சொல்லி விட வேண்டும். இது அவர் போட்டிருக்கும் கண்டிஷன். காரில் போனா கூட காரின் கண்ணாடியை திறக் காமல்தான் போகணும். அந்தளவு...

அவருடைய எண்ணங்கள் அறிந்து நானும் இன்ஜினியரிங் படிக்கும் எங்களின் ஒரே மகளும் அப்படியே நடந்து கொண்டோம். அவர் வெளிநாடு போயிட்டு வரும்போதெல் லாம் விதவிதமான எலக்ட்ரானிக்ஸ் பொருட் கள் வாங்கி வருவார். அது என்னவென்று கூட மாஸ்டர் டிகிரி படித்த நான் பார்க்க மாட்டேன்.

இந்த நிலையில், அவர் கடந்த மாதம் வெளிநாடு போயிட்டு வந்த மறுதினம் அவருடைய லேப்டாப்பை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதை திடீ ரென்று எதிர்பாராத விதமாக பார்த்த நான் அதிர்ந்து போனேன். ஏனென்றால் லேப்டாப்பில் நானும், மகளும் படுத்து உறங்குவது, குளித்துவிட்டு வந்து ஆடைகள் மாற்றுவது, சாப்பிடுவது, டி.வி. பார்ப்பது, வீட்டில் வேலை செய்வது என எல்லாமே படமாக ஓடிக் கொண்டிருந்தது.

இதில் மகளும், நானும் தனித்தனி அறையில் நிர்வாணமாக ஆடை மாற்றும் படத்தைப் பார்த்து அதிர்ச்சியான நான் ஆவேசத்துடன் அடிக்காத குறையாக அவரின் சட்டையை பிடித்து இழுத்து தகராறு செய்து, லேப்டாப்பை உடைத்து பத்ரகாளியாட்டம் ஆடினேன். இதைப் பார்த்து வேர்க்க, விறுவிறுக்க எதுவும் பேச முடியாமல் தடுமாறிய அவர் மயக்கம் போட்டு விழுந்தார்.

அதன்பிறகு சகஜ நிலைக்கு திரும்பிய அவர் எதற்காக இப்படி நடந்து கொண்டேன் என விளக்கமாகக் கூறி எனது காலை பிடித்து மன்னிப்பு கேட்டு, "இனிமேல் இப்படி நடந்து கொள்ள மாட்டேன்' என கெஞ்சியதால் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் அசிங்கம் என கருதி "கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்' என்ற முறையில் நடந்தவைகள் நடந்ததாக இருக்கட்டும் என எல்லாத்தையும் மறந்து விட்டேன்'' என்றார் கண்ணில் நீர் வழிய.

""பெத்த மகளையும் தொட்டு தாலி கட்டின மனைவியையும் எதற்காக இப்படி படம் புடிச்சீங்க? அதுவும் எப்படி'' என அவரிடம் பேசினோம்.

""திருமணத்திற்கு பிறகு என்னவோ நடந்தது போல மனைவி மீது எப்போதும் சந்தேகம் இருந்து வந்தது. அந்த சந்தேகம் தொடர்ந்து வயசுக்கு வந்த பிள்ளைங்க மீதும் நீடித்தது. சந்தேகம் என்னை தினம் தினம் பேயாக மாற்றியது.

இந்தக் காலத்தில் சந்தேகம் என்பது எனக்கு மட்டுமல்ல, எல்லா கணவனுக்கும் அப்பனுக்கும் இருக்கத்தான் செய்கிறது. அதில் எனக்கு கொஞ்சம் அதிகமாயிடிச்சி.

நான் அடிக்கடி வெளிநாடு, வெளியூர் என போயிட்டு இருப்பேன். மனைவி தனியாக இருக்கும்போது என்ன செய்து கொண்டு இருக்கிறாள், யாரெல்லாம் வீட்டிற்குள் வருகிறார்கள். அதை மறைத்து என்னிடம் பொய் சொல்லுகிறாளா என கண்டுபிடிக்க எங்களது பெட்ரூமிலும், மகளின் பெட்ரூமிலும் மற்றும் ஹாலிலும் சிறிய சைஸில் யாரும் கண்டுகொள்ளாதபடி சி.சி.டி.வி. கேமராவை மறைத்து வைத்து இருந்தேன்.

நான் வெளிநாடு போயிட்டு வந்ததும் அந்த கேமராவில் உள்ள மெமரி கார்டை எனது லேப்டாப்பில் போட்டுப் பார்ப்பேன். இதுவரை 3 முறைதான் பார்த்திருக்கிறேன். அப்போது மனைவி, மகளின் அந்தரங்க விஷயங்கள் தெரிந்தாலும் அது எனக்கு ஆபாசமாக தோன்றவில்லை. அது என்னுடைய சந்தேகத்தை பூர்த்தி செய்யக்கூடியதாக இருந்தது.

கடைசியாக பார்க்கும்போது எனது மனைவி பார்த்துவிட்டாள். அதன்பிறகுதான் நடக்கக் கூடாதது எல்லாம் நடந்துவிட்டது. பின்னர்தான் உணர்ந்தேன், எந்த களங்கமும் இல்லாத என் மனைவியை சந்தேகப்பட்டு விட்டேன் என்று. இந்த சம்பவம் என் மனசுக்குள் இருந்து என்னை தினம், தினம் கொன்னுட்டு இருக்கு.

நான் செய்த தப்பால் எதுவும் தெரியாத என் பிஞ்சு மகள் பட்ட வேதனை... எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அந்த பாவம் என்னை விட்டு நீங்காது. இதனால் நிம்மதியே போச்சு. இதுபோன்ற தவறை இனி எவரும் செய்யக்கூடாது என்பதற்காகத்தான் உங்களிடம் சொல்லுறேன். தயவு செய்து பெயரை போட்டுவிடா தீர்கள்'' என கேட்டுக் கொண்டார் அந்த மனிதர்.

தன் மனைவியின் நடத்தையை கண்டுபிடிக்க கேமரா பொருத்திய சிலர், தன் உடன்பிறந்த அக்கா, தங்கைகளின் கள்ளத்தொடர்பு பதிவானதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவங்களும் உண்டு.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"