சுமங்கலி பூஜை எப்படி செய்ய வேண்டும்?


அம்பிகையின் திவ்விய நாமங்களை சொல்லி வழிபடும் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமம் 967 வது திருபெயராக சுவாஷினி என்ற பெயரை அம் மைக்கு கொடுத்து சிறப்பிக்கிறது. சுவாஷினி என்றால் மங்கலம் நிறைந்தவள் என்பது பொருளாகு ம். சுவாஷினி என்பதே சுமங்கலியாக மாறியது எனலாம். கணவ னோடு கூடி இல்லறத்தை நல்லற மாக நடத்துகின்ற பெண்களே சுமங்கலி என்று அழைக்கப்படுவார்கள்.

நல்ல இல்லறம் நடத்துகிற பெண்ணை இந்துமதம் பராசக்தியின் வடிவமாகவே காணுகிறது. எனவே அத்தகைய பெண்களை வழிபடு வதை பராசக்தி வழிபாடாகவே ஏற்றுகொள்ளபடுகிறது. வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்ல தலைமுறை யை ஈன்று கொடுக்கின்ற பெண் உலகத்து நாயகி என்பதில் மாற் றுகருத்து இல்லை அவளை வழி படுவதும் அன்னையை வழிபடுவ தும் ஒன்றுதான்.

பொதுவாக சுமங் கலி பூஜை நவராத்திரி தினங்களி ல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒரு வீட்டில் திருமணம் ஆகாம ல் நெடுநாட்களாக ஒருகன்னி பெண் இருந்தால் அவளுக்கான தோஷத்தை நீக்குவதற்கும் சுமங்கலி பூஜை நடத்தலாம். ஆலயங்களில் மகாலட்சுமி ஹோமம் செய்துமுடித்த பிற கு சுமங்கலி பூஜை நடத்து வது வழக்கம். சுமங்கலி பூஜை செய்தால் சகல தோஷ ங்களும் நிவர்த்தியாகி விடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

வீடுகளில் சுமங்கலி பூஜை செய்ய வேண் டுமென்றால் இல்லத்தை தூய்மை படுத்தி மாக்கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டி அழகு படுத்த வேண்டும். சுவாமி அறையில் உள்ள படங்களுக்கு மாலை சாற்றி தூபமிட்டு விளக்கேற்ற வேண்டடாம். சுமங்கலி பூஜைக்காக ஒற்றைப்படை எண்ணிக்கையில் பெண்கள் அழைக்கப் படலாம் அதாவது மூன்று ஐந்து ஏழு ஒன்பது என்ற எண்ணிக்கை யில் பெண் களை அழைப்பது கட்டாயம்.


பூஜைக்காக அழைக்கப்படும் பெண்களுக்கு நல்லமுறையில் வர வேற்பு கொடுக்க வேண்டும். பிறகு அவர்களை தாம்பாள தட்டில் நிற்க வைத்து இல்லத்தலைவி பாத பூஜை செய்ய வேண்டும். குங்குமம் சந்தனம் மலர்கள் கொடுத்து பெண்களை மனையில் மரியாதை யோடு அமர செய்ய வேண்டும். பிறகு ஒவ்வொரு பெண்ணையும் அன்னை பராசக்தியாக கருதி தீபாராதனை செய்து வழிபட வேண்டும். ஒவ்வொரு பெண்ணிடமும் தனித்தனியாக பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். வழிபாடு முடிந்த பிறகு புடவை ரவிக்கை மஞ்சள் கண்ணாடி குங்கும சிமிழ் புஸ்பம் வெற்றிலை பாக்கு தட்சணை கொடுத்து உபசரிக்க வேண்டும்.

பூஜைக்கு வந்த பெண்களுக்குக் கட்டாயம் அறுசுவை உணவு கொடுக்க வேண்டும். அவர்கள் கையலம்பக் கண்டிப்பாக நீர்வார்க்க வேண்டும். அதன் பிறகு மீண்டும் ஒருமுறை அவ ர்களை வணங்கி வழியனுப்ப வேண்டும். அதன் பிறகு தான் பூஜை நடத்திய வீட்டுகாரர்கள் உணவு எடுத்து கொள்ள வேண்டும்.

சுமங்கலி பூஜைக்கு திங்கள், புதன், வெள்ளி போன்ற தினங்கள் உக ந்தது ஆகும். இந்த தினங்களில் ராகு காலம் வராத எந்த நேரமும் நல்ல நேரமே ஆகும். சுமங்கலி பூஜை செய்தால் செய்யப்படும் வீட்டில் வறுமை, நோய், துன்பம், தோஷம் நீங்கி வள மோடு வாழ்வார்கள் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தில் பக்தியும் இரு க்கிறது. அக்கம் பக்கத்து வீட்டாரோடு கொள்கின்ற ஐக்கியமும் இருக்கிறது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"