"ஜிமெயில் டிரிக்" தேவையற்ற மின்னஞ்சல்களை மட்டும் delete செய்யும் வழி


ஜிமெயில் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போவதற்கு முக்கிய காரணமே, மற்ற மின்னஞ்சல் சேவைகளைக் காட்டிலும் இதிலுள்ள அதிகப்படியான வசதிகளும், புதிதுபுதிதாக பல வசதிகளை வழங்கிவரும் கூகுளின் சேவையுமே ஆகும். 

ஜிமெயிலை அனைவரும் ஒரே விதத்தில் பயன்படுத்துவதில்லை. உதாரணமாக ஒரு சிலர் தங்களுக்கு வரும் மின்னஞ்சல்கள் அனைத்தையுமே உடனடியாக படித்து விடுவது வழக்கம். மற்றும் சிலர் வருகின்ற மின்னஞ்சல்களில் மிகவும் அவசியமானவற்றை மட்டிலும் படித்துவிட்டு, மற்றவைகளை படிக்காமலேயே Inbox -ல் விட்டுவிடுவது, அல்லது ஏதாவது Label லில் சேமித்து வைப்பது என பல விதங்களில் பயன்பாடு மாறுபடுகிறது. 

இப்படி படிக்காமலேயே இன்பாக்ஸில் விட்டு வைத்து வரும்பொழுது சில நாட்கள் கழித்து Unread messages 28, 60 என ஒரு சிலரது ஜிமெயில் கணக்கில் நூற்றுக்கணக்கில் இருக்கும் . 
ஒருவேளை இவையனைத்தையும் டெலிட் செய்வதாக இருந்தால் வழி கொஞ்சம் சுலபம்தான். Drop down மெனுவிலுள்ள லிஸ்டில் Unread என்பதை தேர்வு செய்தால் Unread மெயில்கள் அனைத்தும் தேர்வாகிவிடும்,
 

Delete பொத்தானை அழுத்தி நீக்கிவிடலாம். 

 
ஆனால் இப்படி தேர்வு செய்யும் பொழுது, Unread மெயில்கள் மட்டும் தனித்து திரையில் தெரியாது, ஏற்கனவே படித்த மெயில்களுடன் கலந்து தேதி வாரியாகவே தோன்றும். இதனால் Unread மெயில்களை  சில சமயங்களில் பல திரைகளில் தேடவேண்டியிருக்கும். 

அப்படியானால் கடந்த நாட்களில் படிக்காத மின்னஞ்சல்களை மட்டும் வரிசையாக பட்டியலில் பார்த்து, தேவையானவற்றை வாசித்தும், தேவையற்ற மின்னஞ்சல்களை delete செய்யவும் ஏதேனும் வழியிருக்கிறதா? இதற்கான ஒரு சிறிய ட்ரிக் ஒன்றை பார்க்கலாம். 

உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொண்டு, மேலே உள்ள Search Mail பெட்டியில் is: என டைப் செய்யுங்கள். 


திறக்கும் லிஸ்ட் பாக்ஸில் is:unread என்பதை தேர்வு செய்யுங்கள். (அல்லது டைப் செய்து கொள்ளலாம்) இப்பொழுது உங்கள் ஜிமெயில் கணக்கில் நீங்கள் படிக்காத அனைத்து மின்னஞ்சல்களும் வரிசையாக பட்டியலில் கிடைக்கும்.
ஆனால் இந்த முறையில் நமக்கு இன்பாக்ஸில் உள்ள Unread மெயில்கள் மட்டுமின்றி, நீங்கள் உருவாக்கி சேமித்து வைத்துள்ள label களில் உள்ள Unread மெயில்களும் பட்டியலிடப்படும். ஆனால் நமக்கு inbox -இல் உள்ள Unread  மெயில்கள் மட்டும் பார்க்க வேண்டுமெனில், அதே கட்டளையோடு label:inbox என கொடுத்தால் போதுமானது. (is:unread label:inbox)


இப்பொழுது உங்கள் இன்பாக்ஸில் உள்ள படிக்காத மெயில்கள் மட்டும் பட்டியலில் காணக் கிடைக்கும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"