உலகில் தோன்றிய முதல் வலைத்தளம்,மின் அஞ்சல் மற்றும் தேடுபொறி


இணையத்தில் இன்று நாம் பயன்படுத்தி வரும் மின் அஞ்சல்கள் (email) பற்றி பலருக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இந்த மின் அஞ்சலை முதன் முதலில் உருவாக்கி அனுப்பிய முதல் மனிதர் யார் என்று உங்களுக்கு தெரியுமா..? ரேமண்ட் எஸ். டாம்லின்சன் (Raymond S. Tomlinson) தான் முதல் மின்னஞ்சலை அனுப்பியவர். அதுவரை ஒரே கணிணியில் இருந்துதான் இரு நபர்களுக்குள் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. 1971ல் இவர் அனுப்பிய மின்னஞ்சலில்தான் ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு அனுப்பப்பட்டது. மின்னஞ்சல் முகவரியில் பயன்படுத்தப்படும் ‘@’ என்ற குறியீட்டை அறிமுகப்படுத்தியவரும் இவரே.

இன்று தேடுபொறி (search engine) என்றாலே உடனே அனைவரின் எண்ணங்களிலும் பதிலாய் வருவது கூகுள்தான் என்று சொல்லலாம் அந்த அளவிற்கு பரவிக்கிடக்கிறது இதன் புகழ். ஆனால் நம்மில் எத்ததனை பேருக்கு உலகத்தில் முதன் முதலில் இணையத்தில் பயன்படுத்தப்பட்ட முதல் தேடுபொறி (search engine) பற்றித் தெரியும் !? ஏப்ரல் 20, 1994ல் தொடங்கப்பட்ட www.webcrawler.com தான் இணையத்தின் முதல் தேடுபொறியாகும் (search engine). யாஹீவும் (Yahoo), கூகுளும் (Google) இதற்கு பின்னால் வந்தவையே.

வலைத் தளம் எப்பொழுது முதன் முதலில் தொடங்கப்பட்டது. உலகத்தில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட தளத்தின் பெயர் என்ன?ஜஸ்டின் ஹால் (Justin Hall) தான் இணையத்தின் முதல் வலைப்பதிவாளராக அறியப்படுகிறார். ஜனவரி 1994ல் தொடங்கப்பட்ட இவரின் http://www.links.net/ தான் இணையத்தின் முதல் வலைப்பதிவாகும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"