அனைத்து விதமான கோப்புக்களைளையும் பிரிக்கவும் சேர்க்கவும் இலவச மென்பொருள்


உங்களிடம் உள்ள பைல்கள் - புகைப்படங்கள் - விடியோக்கள் என எந்த பைலையும் நீங்கள் விரும்பும் அளவிற்கு துண்டுகளாக்கி பின்னர் மீண்டும் அதை முழு பைல்களாக மாற்றி தருகின்றது. ஒரு பெரிய பைலை நீங்கள் மற்றவருக்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம் துண்டு துண்டாக்கி சுலபமாக அனுப்பலாம்.இது பைல்களை .hkc மற்றும்.hkm பைல்களாக மாற்றிவிடுகின்றது.

இதில் .hkm பைல்தான் முக்கியமானது. மீண்டும் நீங்கள் பைல்களை ஒன்று சேர்ககும்போது இந்த .hkm பைலை கிளிக் செய்தால் போதுமானது.உங்களிடம் முக்கியமான பைல் இருக்கின்றது. அதை இந்த சாப்ட்வேர் மூலம் துண்டுகளாக்கி பின்னர் இந்த .hkm பைலை மட்டும் நீங்கள் தனியே வைத்துவிடலாம். மற்றவர்களால்.hkm இல்லாமல் இந்த பைலை படிக்க முடியாது.

இதில் முதலில் Split File கிளிக் செய்து பின்னர் Set Size கிளிக் செய்யவும் .உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன ஆகும். அதில் நீங்கள் பைல்களை எத்தனை கே.பி. அளவிற்கு வேண்டுமோ அந்த் அளவினை செட் செய்யவும்.

பின்னர் ஓ.கே. தரவும். அடுத்து நீங்கள் துண்டுகளாக்க விரும்பும் பைல் உள்ள டிரைவினை Choose File மூலம் தேர்வு செய்யவும்.அடுத்து அதன் கீழே உள்ள Start Spliting or Joining கிளிக் செய்யவும்.

இப்போது மீண்டும் இதை சேர்க்க வேண்டும். மீண்டும் இந்த சாப்ட்வேரை திறந்து கொண்டு முன்பு செய்தவாறு செய்யவும்.இப்போது Join Fils எதிரில உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்யவும். பைலை தேர்வு செய்யவும். நீங்கள் சேமித்து வைத்துள்ள இடத்தில் இருந்து .hkm பைலை மட்டும் கிளிக் செய்யுங்கள். அவ்வளவுதாங்க. உங்கள் பைல் முழுமையாக உங்களுக்கு கிடைத்துவிடும்.

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"