யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம்?


யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம்?
  • 18 - 60 வயது வரையுள்ள எல்லா ஆண்களும், பெண்களும் ரத்த தானம் செய்யலாம்.
  • ரத்த தானம் செய்பவரின் எடை குறைந்தபட்சம் 45 கிலோ இருக்க வேண்டும்.
  • ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேல் இருக்க வேண்டும்.
  • ரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும்.

யாரெல்லாம் ரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்?
  1. கர்ப்பிணிகளும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்களும் தவிர்க்க வேண்டும்.
  2. பெரிய அறுவை சிகிச்சை செய்துகொண்ட 6 மாதங்களுக்குள்ளும், சிறிய அறுவை சிகிச்சை செய்துகொண்ட 3 மாதங்களுக்குள்ளும் ரத்த தானம் செய்வதை தவிர்க்கவும்.
  3. மலேரியா நோய் சிகிச்சை பெற்ற மூன்று மாதங்களுக்கு தவிர்க்கவும்.
  4. மஞ்சள்காமாலை சிகிச்சை பெற்ற 6 மாதங்கள் வரை தவிர்ப்பது நல்லது.
  5. பால்வினை/ஹெச்.ஐ.வி. பாதிப்புள்ளவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது.
  6. மாதவிடாய் நேரங்களில் பெண்கள் ரத்த தானம் செய்ய வேண்டாம்.



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"