லேப்டாப் டச் பேடை disable செய்ய இலவச மென்பொருள்


சில நேரங்களில் நாம் டைப் செய்யும் பொழுது, நம்மையறியாமலேயே நமது கைகள் டச் பேடில் படும் பொழுது, மௌஸ் கர்சர் நாம் டைப் செய்து கொண்டிருக்கும் திரையை விட்டு, வேறு எங்காவது ஒடி விடுவது வாடிக்கை. இதிலும் கொடுமை என்னவென்றால், இந்த கர்சர் எங்காவது ஓடி, அந்த சமயத்தில் தேவையில்லாத ஏதோ ஒரு அப்ளிகேஷனை திறந்து கொள்வதுதான்.

ஒரு சில லேப்டாப்/நெட்புக்குகளில் கீ பேடிலேயே டச் பேடை disable செய்து கொள்ளும் வசதி உண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் டைப் செய்யும்பொழுது ஞாபகமாக இந்த கீகளை அழுத்தி டச் பேடை disable செய்வது இயலாத காரியம். 



Google Code வழங்கும்  Touch Freeze இலவச ஓபன் சோர்ஸ் மென்பொருள் கருவி! (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) 

இதனை தரவிறக்கி பதிந்து கொண்ட பிறகு, டாஸ்க்பாரில் இதன் ஐகானை க்ளிக் செய்து Load at System Startup வசதியை enable  செய்து கொள்ளுங்கள்.

இந்த கருவியின் சிறப்பான பணி என்னவெனில், அமைதியாக டாஸ்க்பாரில் அமர்ந்து கொண்டு எப்பொழுதெல்லாம் நீங்கள் டெக்ஸ்ட் டைப் செய்கிறீர்களோ அந்த சமயங்களிலெல்லாம் டச் பேடை   Freeze செய்து விடும். இதனால் மௌஸ் கர்சர் ஆங்காங்கே அலையாமல் இருப்பதால், தேவையற்ற டென்ஷன் ஏதுமின்றி உங்கள் பணியை தொடரலாம். 

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"