ஐந்து சகோதரர்களை திருமணம் செய்து குடும்பம் நடத்தும் பெண்!!


இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகரான டேராடூனில் உள்ள கிராமமொன்றில் பெண்ணொருவர் 5 கணவர்களுடன் வசித்து வருகின்ற செய்தி வெளியாகியுள்ளது. அப்பெண்ணின் கணவர்கள் ஐவரும் சகோதர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜோ வேர்மா என்ற குறித்த பெண்ணின் வயது 21. அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. எனினும் குழந்தையின் தந்தை ஐவரில் யார் என்பது குறித்து அப்பெண்ணுக்கு தெரியாது.

இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். ராஜோவேர்மாவை முதல்முறையாக திருமணம் செய்த கணவரின் பெயர் குட்டு (21) . அவரையே சட்டபூர்வமாக திருமணம் செய்துள்ளார். பின்னர் அவர் தனது கிராமத்து வழக்கப்படி கணவரின் சகோதர்களான பாஜு(32), சாந்த் ராம்(28), கோபால்(26), தினேஷ் (19) ஆகியோருடன் வாழ்ந்து வருகின்றார். தான் ஒவ்வொருவருடனும் உடலுறவு கொள்வதாக தெரிவிக்கும் ராஜா வேர்மா அனைவரையும் ஒரே போல் கவனித்து வருவதாகவும் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் சகோதரர்களும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருப்பதாகவும், தனது தாயும் 3 கணவர்களுடன் வாழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். பலதுணை மணம் என்பது ஒருவர் ஒரே சமயத்தில் பலரைத் திருமணம் செய்து துணைவராகக் கொண்டிருப்பதைக் குறிக்கும். இதனை ஆங்கிலத்தில் polygamy என்பர். மணம் செய்பவர் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம். எனவே பலதுணை மணத்தை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.



ஓர் ஆண் ஒரே சமயத்தில் பல பெண்களை மணந்து மனைவியராக்கிக் கொண்டு வாழுதல் பலமனைவி மணமுறை ஆகும்.இது polygyny என்றழைக்கப்படுகின்றது. அதேபோல் ஒரு பெண் பல கணவர்களைத் திருமணம் செய்து வாழும் முறை பலகணவர் மணம் எனப்படும் இதுவே ஆங்கிலத்தில் polyandry என்றழைக்கப்படுகின்றது.

ஒரு பெண் பல கணவர்களைத் திருமணம் செய்து வாழும் முறை இக்காலத்தில் மிகக் குறைவான அளவிலேயே பின்பற்றப்படுகின்றது. எனினும் இந்தியாவில் இமயமலைப் பகுதிகளில் இன்னும் பல கணவர்களுடன் வாழும் முறைமை பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"