பாலியல் வன்முறையிலிருந்து தற்காக்கும் பெண்களுக்கான உள்ளாடை


பாலியல் வல்லுறவிலிருந்து தற்காப்பை ஏற்படுத்திகொள்ளும் வகையில் பெண்களுக்கான உள்ளாடை ஒன்றை இந்திய பொறியியல் துறை மாணவர்கள் தயாரித்துள்ளனர்.

பெண்களிடம் யாரேனும் தவறாக நடக்க முயற்சிக்கும்போது, அவர்கள் இவ்வாடையினூடாக 3,800 கிலோவோல்ட் அதர்ச்சியை எதிர்கொள்வர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உள்ளாடையானது அதர்ச்சியினால் எதிரியை முடக்கிய பின்னர், செய்மதி வலையமைப்பினூடாக தானாகவே குறுந்தகவலை பொலிஸ் நிலையங்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆடையில் உணர்த்திகளானது மார்பு பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன. வன்முறையான அழுத்தம் காரணமாக குறித்த ஆடைகளில் பொருத்தப்பட்டுள்ள உணர்த்திகள் 82 வரையிலான மின்சார அதர்ச்சிகளை தாக்குவோர் மீது தரும் என தெரிவிக்கப்படுகின்றது.

இச்சாதனத்தின் உருவாக்கத்தில் பங்கேற்ற மனிஷா மோஹன் என்பவர் தெரிவிக்கையில், 'இந்த உள்ளாடையானது செய்மதி வலையமைப்பினூடாகவும் கையடக்கத்தொலைபேசி வலையமைப்பினூடாகவும் பொலிஸாருக்கும் பெற்றோருக்கும் தகவல்களை உடனடியாக தெரிவிக்கின்றது' என்றார்.

நபர் ஒருவர் ஒரு பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்த முயலும்போது அந்நபர் இப்பெண்ணின் உள்ளாடையில் பொறுத்தப்பட்டுள்ள உணர்த்திகளினூடாக மிக பெரிய மின்சார அதிர்ச்சியை எதிர்கொள்வார். இதன்போது மேற்படி வலையமைப்பிகளினூடாக குறுந்தகவல்கள் உடனடியாக பறிமாற்றப்படுகின்றன' என அவர் மேலும் தெரிவித்தார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"