விருந்தில் மயக்க மருந்து கொடுத்து 13 வயது சிறுமி பலாத்காரம்!!


மும்பை புறநகர் பகுதியான சாந்தா குரூசைச் சேர்ந்தவர் மெல்வின் டிசோசா. இவர் மும்பையில் தனது காதலி வீட்டில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். அந்த விருந்துக்கு தமது நண்பர்களான சச்சின் யாதவ், பிபின்சிங், வெங்கட் நாயுடு ஆகியோரை அவர் அழைத்து இருந்தார். அத்துடன் காதலியின் தோழியான 13 வயது சிறுமியையும் டிசோசா விருந்துக்கு வரவழைத்தார்.

விருந்து நிகழ்ச்சியின் போது அனைவரும் குளிர்பானம் அருந்தினர். ஆனால் 13 வயது சிறுமி மட்டும் குளிர்பானம் அருந்திய சிறிது நேரத்தில் மயங்கி விழுந்திருக்கிறார். பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமி வீடு திரும்பினாள். வீட்டில் கடுமையான வலியால் துடித்த அவளிடம் தாயார் விசாரித்த போது குளிர்பானம் குடித்து மயங்கிக் கிடந்த கதையை விவரித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து அந்த சிறுமி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.. மருத்துவர்களின் அறிக்கை மற்றும் சிறுமியின் வாக்குமூலத்தின் படி விருந்துக்கு வரவழைத்த டிசோசா மற்றும் அவரது நண்பர்கள் மூவர் உட்பட 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பலாத்காரம் மற்றும் சிறுமியை வன்கொடுமைக்கு ஆளாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சிறுமியின் தோழியான டிசோசாவின் காதலியும் தற்போது போலீஸ் பிடியில் சிக்கியிருக்கிறார்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"