வீட்டுக் கடன் வாங்கும் போது மறக்காம வீடு காப்பீட்டுத் திட்டத்தையும் செய்யுங்கள் !!


வீட்டுக் கடன் வாங்குற எல்லாருமே ரெண்டு வகையான இன்ஷூரன்ஸ்களை கட்டாயம் எடுத்துக்கணும். ஒண்ணு கடனுக்கு! இன்னொண்ணு வீட்டுக்கு!

கடன் வாங்கினவருக்கு திடீர்னு ஏதாச்சும் அசம்பாவிதம் ஏற்பட்டா, கடனைக் கட்ட முடியாம மனைவி, பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாதில்லையா.. அதனால வீட்டுக் கடனுக்கு இன்ஷூரன்ஸ் அவசியம்.புயல், வெள்ளம், பூகம்பம், தீவிரவாதத் தாக்குதல் மாதிரியான பிரச்னைகள்ல சிக்கி வீடு பாதிக்கப்பட்டா, மொத்தமா இடிஞ்சுபோய் உட்கார்ந்திடாம இருக்க வீட்டுக்கும் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கணும். இதுக்கு வீட்டு உரிமையாளர் பாலிசினு பேர்.

ஒருவர், தன்னோட 30 லட்ச ரூபாய் வீட்டுக் கடனை 15 வருஷத்துல திருப்பிக் கட்டுறார்னு வச்சுக்குவோம். அவர், இந்தக் கடன் தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுத்தா வருஷத்துக்கு சுமார் 13 ஆயிரம் ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டியிருக்கும். இதை மூணு மாசத்துக்கு ஒரு தடவை பிரிச்சுக் கட்டிக்கிற வசதியும் இருக்கு.

கடனை திரும்பச் செலுத்துற முழு காலத்துக்கும் மொத்தமா சேர்த்து பிரீமியம் கட்டினா லாபமானதா இருக்கும். அதாவது, அவர் சுமார் 65 ஆயிரம் ரூபாய் மொத்தமா கட்டினா போதும். 15 வருஷத்துக்கும் கவர் ஆயிடும். இடையில பிரீமியம் எதுவும் கட்ட வேண்டியதில்லை. இந்த இன்ஷூரன்ஸூக்கு கட்டுற பிரீமியத்துக்கு 80-சின் கீழ் வரிச் சலுகை இருக்கு.

வீட்டுக்கான இன்ஷூரன்ஸூக்கு பிரீமியம் ரொம்ப கம்மிதான். 10 லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுத்தா, அதிகபட்ச ஆண்டு பிரீமியம் 650 ரூபாய்தான் வரும். இதுவே 5 வருஷத்துக்கான பிரீமியத்தை மொத்தமா கட்டுனா, பிரீமியத்துல 40% தள்ளுபடி கிடைக்கும்.

பெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள்ல, கடன் கொடுக்கும்போது இந்த ரெண்டு வகையான இன்ஷூரன்ஸையும் அவங்களே எடுத்து, அதைக் கடன் தொகையோட சேர்த்துடுவாங்க.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"