விபச்சாரத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவி கைது!


திருவொற்றியூர் குமரன் நகர் 9 ஆவது தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு அடிக்கடி வெளி ஆட்கள் வந்து செல்வதாக திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. ஆய்வாளர் பிரபு தலைமையில் காவல்துறையினர் விரைந்து சென்று சோதனையிட்டபோது, அந்த வீட்டில் விபசாரம் நடைபெறுவது தெரியவந்தது.

அப்போது விபசாரத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். விசாரணையில், அப்பெண் மயிலாடுதுறையை சேர்ந்த இவர் நர்சிங் கல்லூரி ஒன்றில் 3 ஆம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது. அவரை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெருமாள்(42), சஞ்சுலட்சுமி (38) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவி மயிலாப்பூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். மற்ற இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர் இச் சம்பவம் திருவொற்றியூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"