மகளின் கட்டிலுக்குக் கீழே பதுங்கி இருந்த கணக்கு வாத்தியார்!!


தனது மகளின் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட அவரது தாயார், மகளின் அறைக்குள் ஒரு நாள் அதிரடியாக நுழைந்தார். அறை முழுவதும் தேடிப் பார்த்தார். அப்போது கட்டிலுக்குக் கீழே பதுங்கியிருந்த மகளின் கணக்கு வாத்தியாரை அவர் கையும் களவுமாக பிடித்து வெளியே கொண்டு வந்தார் தற்போது கணக்கு வாத்தியார் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த கூத்து இங்கிலாந்தின் போல்டன் நகரில் நடந்துள்ளது. அந்த மாணவியின் வயது 16. கணக்கு வாத்தியாரின் வயது 35. கடந்த சில நாட்களாக தனது மகள் மிகவும் லேட்டாக வருவதைப் பார்த்தார் தாயார்.

இதனால் அவருக்கு மகள் மீது சந்தேகம் வந்தது. தப்பு செய்பவர்கள்தான் கண்டிப்பாக ஏதாவது தடயத்தை விட்டு வைத்து விட்டுத்தானே செய்வார்கள்… அதேபோல மகளும் தனது தவறால் தற்போது வகையாக மாட்டிக் கொண்டார். ஒரு நாள் மகளுக்காக காத்திருந்தார் தாயார். மகளும் வழக்கம் போல லேட்டாக வந்தார்.

மகளுக்குத் தெரியாமல் காத்திருந்த தாயார், தடாலடியாக மகளின் அறைக்குள் புகுந்தார். அறை முழுவதும் தேடினார். கட்டிலுக்குக் கீழே குணிந்து பார்த்தபோது அதிர்ந்தார். காரணம் அங்கு மகளின் கணக்கு வாத்தியார் பம்மிக் கிடந்ததால். உடனடியாக அவர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் வந்து வாத்தியாரைக் கைது செய்து கூட்டிச் சென்றனர்.

தினசரி தாயாருக்குத் தெரியாமல் தனது கணக்கு வாத்தியாரை வீட்டுக்குக் கூட்டி வந்துள்ளார் அந்த மாணவி. இது தனது தாயாருக்குத் தெரியாது என்றும் நினைத்துள்ளார். ஆனால் மகள் மீது சந்தேகமடைந்த தாயார் அதிரடியாக ரெய்டு விடவே சிக்கினார்கள் இருவரும். அந்த ஆசிரியர் மீது தற்போது பள்ளி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"