இறந்தவருடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற ஆசையில் காதலியின் மகள் கொலை


அமெரிக்காவில் வினோதமான ஆசை ஒன்றுக்காக தனது காதலியின் 24 வயது மகளைக் கொன்றவர் சிறையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள டீர்பீல்ட் என்ற சிறிய நகரத்தின் தேவாலயத்தில் நிர்வாகப் பதவியில் இருந்தவர் ஜான் டி ஒயிட் என்பவர் ஆவார். 56 வயதான இவர் தன் காதலியின் 24 வயது மகளைக் கொன்றதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த மார்ச் மாதம் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒயிட், இந்தக் கொலைக்கு சொன்ன காரணம் விநோதமானது. இறந்தவருடன் உடலுறவு கொள்ளவேண்டும் என்ற ஆசையினால் தான் காதலியின் மகளை கொலை செய்யதாக கூறியுள்ளார்.

இந்தக் கொலைக்காக அவருக்கு 56 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ஒயிட் மிக்சிகனில் உள்ள சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று இவர் தூக்கிலிட்டுக்கொண்டு இறந்துள்ளதாக சீர்திருத்த அலுவலகத்தின் தகவல் அதிகாரி ருஸ் மார்லன் பத்திரிகையாளரிடம் தெரிவித்துள்ளார்.

அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவரைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் ருஸ் மார்லன் தெரிவித்தார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"