மனைவிக்கு அல்வா வாங்கிக் கொடுப்பதன் ரகசியம்???


அந்த காலத்தில் பலகார வகைகளில் முறுக்கு, சீடை, கெட்டி உருண்டை, பக்கோடா, மிக்சர், காராசேவு போன்ற காரவகைகளும், அல்வா, பூந்தி, ஜாங்கிரி, லட்டு போன்ற இனிப்பு வகைகளும் மட்டுமே உண்டு...

மேற்சொன்ன காரவகைகளில் எதை வாங்கி சாப்பிட்டாலும் மொறு மொறு என்று சத்தம் வரும்.... ஜாங்கிரி, பூந்தி, லட்டு போன்ற இனிப்பு வகைகள் சாப்பிடும் போது கீழே உதிர்ந்து விழும்... இதனை எறும்புகள் இழுத்து செல்லும் போது மற்றவர்கள் பார்க்கும் வாய்ப்பு அதிகம்...

ஆனால் அல்வா என்பது சத்தம் வராமலும், கீழே உதிராமலும், நல்ல இனிப்புடனும் இருக்கும்... பெற்றோருக்கோ, மற்றவர்களுக்கோ தெரியாமல் ரகசியமாக கமுக்கமாக சாப்பிட அல்வா மட்டுமே உகந்தது.....

வீட்ல இருக்கவங்களுக்கு கொஞ்சம் கொடுத்துட்டு சாப்பிட்டா கொறைஞ்சி போயிடும்னு என்னா கிரிமினலா யோசிச்சு இருக்காய்ங்க பய புள்ளைய.. பாருங்க....

இப்போதுள்ள சந்ததியினருக்கு சப்தம் வராமல் சாப்பிட நிறைய அயிட்டங்கள் கிடைக்கிறது.... பெங்காலி ரசகுல்லா, குலோப் ஜாமூன் போன்றவை நல்ல பலன் தரும்.... சாப்பிடும் பொது வழியும் ஜீராவை நேரடியாக நாமும் சுவைக்கும் வசதி இவைகளில் உள்ளது....

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"