வீட்டுக்கு வண்ணங்களை விரும்பியபடி சுலபமாக தேர்வு செய்யலாம்!!


மிகப்பெரிய அறைகளை சிறியதாக கச்சிதமாகக் காட்ட அடர் வண்ணங்களைப் பூச வேண்டும். சிறிய அறைகளை எடுப்பாகவும், விசாலமாகவும் காட்ட வெளிர் வண்ணங்களைப் பூச வேண்டும் போன்ற அடிப்படையான விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு வண்ணங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

சில வண்ணங்கள் சாதரணமாகப் பார்க்கும் போது நன்றாக இருக்கும். ஆனால், சுவரில் அடித்த பிறகு நாம் நினைத்தபடி இல்லையோ என்ற எண்ணம் தோன்றும். பக்கத்து அறைக்கும், இன்னொரு அறைக்கும் சிறிய வித்தியாசம் வரும் வகையில் வண்ணங்களைத் தேர்ந்தெடுத்திருப்போம். ஆனால், பார்ப்பதற்கு ஏறத்தாழ இரண்டும் ஒரே மாதிரியாகக் கூட தோற்றமளிக்கும்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் கட்டப்பட்ட வீடாக இருந்தால், ஆர்க்கிடெக்ட் வண்ணங்களைத் தேர்வு செய்து, இந்த அறைக்கு இப்படி அடிக்கலாம் என கணினியில் படம் போட்டுக் காட்டுவார்கள்.

இந்த இணையதளத்தில் வீட்டின் அறைகளைப் புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.பிறகு, அந்த இணைய தளத்தின் உதவியுடன் விருப்பமான வண்ணங்களைப் பூசி நமக்குப் பிடித்தமானதைத் தேர்வு செய்யலாம். அறைகளுக்குள் ஏற்கெனவே அறைகலன்கள் வைக்கப் பட்டிருந்தால், அதற்கு ஏற்ற வகையிலும் வண்ணங்களைத் தேர்வு செய்ய முடியும். இந்த இணையதளத்தின் சேவை ஓரளவு திருப்திகரமாகவே இருக்கிறது.

ஒரே அறையை வெவ்வேறு வண்ணங்களால் அழகுபடுத்தியப் பிறகு, அந்தப் புகைப்படங்களை நாம் பிரின்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம். அதை மாதிரியாக வைத்துக் கொண்டு வீட்டில் எல்லோரும் ஆலோசனை செய்து பின்னர் வண்ணங்களைத் தேர்வு செய்யலாம்.

இணையதள முகவரி : http://colorjive.com/home.action

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"