சிறையில் இருக்கும் கணவனை சந்திக்க நிர்வாண போராட்டம் நடத்திய பெண்!!

அமெரிக்காவின் அர்லிங்டன் நகரில் உள்ள ரெஸ்டான் பகுதியை சேர்ந்த ஒருவரை சில தினங்களுக்கு முன்னர் போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர். கணவர் சிறையில் வாடும் நிலையில் அவரை பிரிந்து தனியே இருப்பதை எண்ணி வேதனைப்பட்ட அவரது மனைவி மவ்ரா ஃபுசெல் (26) அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு இரவு 11 மணியளவில் அப்பகுதி சிறைச்சாலையின் அருகே உள்ள மாஜிஸ்திரேட் அலுவலகத்துக்கு சென்றார்.

முழு போதையில் இருந்த அவர், திடீரென்று ஆடைகளை எல்லாம் கழற்றி வீசி விட்டு, மாஜிஸ்திரேட் அலுவலகத்தினுள் சென்று அமர்ந்து கொண்டார். தன்னையும் கணவருடன் சிறை அறையில் அடைத்து வைக்குமாறு நிர்வாண போராட்டம் நடத்திய அந்த பெண்ணை சமாதானப்படுத்த முயன்ற போலீசார், ‘டாக்சியை வரவழைக்கிறோம். ஆடைகளை அணிந்து கொண்டு ஒழுங்காக வீடு போய் சேர்’ என்று மிரட்டிப் பார்த்தனர்.

’வீடு திரும்புவது என்றால், அது என்னுடைய கனவருடன்தான்’ என்று திட்டவட்டமாக தெரிவித்த மவ்ரா ஃபுசெல் வெளியே போக மறுத்து விட்டார். ஆண்கள் சிறையில் பெண்களை அடைத்து வைக்க முடியாது என்று போலீசார் கூறிய எந்த விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ளாத அவர், ஆடைகளையும் அணிய மறுத்தார்.

வெகு நேரம் கெஞ்சிப் பார்த்த போலீசார், குடிபோதையில் நிர்வாணமாக வந்து, அநாகரிகமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டின் கீழ் அவரை அர்லிங்டன் சிறையின் பெண்கள் பிரிவில் அடைத்தனர். தண்டனை முடிந்த அவரது கணவரும், ஒரு நாளிரவு மட்டும் சிறைவாசத்தை அனுபவித்த மவ்ரா ஃபுசெல்-லும் மறுநாள் காலை ஜோடியாக கை கோர்த்தபடி விடுதலையாகி வெளியே வந்தனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"