ஆண்களுக்கும் பெண்களுக்கும் அடிப்படையான மனோதத்துவ வித்தியாசங்கள்?


ஆண்களும், பெண்களும் மனோ தத்துவ ரீதியாக ஒரே மாதிரியானவர்கள் அல்ல, அவர்களுக்குள் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த உண்மை நம்மில் பலருக்குத் தெரியாது. நாம் ஆண்களாக இருந்தால், சின்ன விஷயங்களைக்கூட இவர்களால் ஏன் புரிந்துகொள்ளவில்லை என்று எரிச்சல் படுவோம்: பெண்களும், இந்த ஆண்கள் ஏன் முரட்டுப் பிடிவாதம் பிடிக்கிறார்கள் என்று சலிப்பார்கள். எரிச்சலும் சலிப்பும் உரசலுக்குக் கொண்டுபோகும். கண்டுகொள்ளாமல் விட்டால், உரசல் விரிசலாகும்.

எண்ணங்களில், மனத் தேவைகளில், உறவு எதிர்பார்ப்புகளில், பிரச்சி னைகளை அணுகும் விதத்தில், கருத்துக் களை வெளிப்படுத்தும் முறையில், பழகும் பாணியில், ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே நாம் எதிர்பார்க்கவே முடியாத வித்தியாசங்கள் இருப்பதாக அறிஞர்கள் சொல்கிறார்கள்.

ஆண்கள் விரும்புபவை, மதிப்பவை – அதிகாரம், பதவி, திறமை, வெற்றிகள். பெண்களோ இவற்றுக்கும் அதிகமாக, அன்பு, உறவுகள், தாங்கள் பிறரால் மதிக்கப்படும் விதம் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்.

பெண்கள் சின்னச் சின்ன விஷயங்களில் சந்தோஷம் பெறுகிறார்கள்.

பெண்களின் மனோபாவங்கள் ஆண்களிடமிருந்து வித்தியாசமானவை – அவர்களுக்கு மல்லிகைப் பூவும், வைர நெக்லஸும் ஒன்றுதான். பரிசுகளின் விலை மதிப்பைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. இரண்டுமே, அவர்களுக்கு அன்பின் அடையாளங்கள். இரண்டுமே ஒரே மகிழ்ச்சி தருகின்றன. ஆணோ, பரிசின் விலைக்கு ஏற்ற சந்தோஷத்தை எதிர்பார்க்கிறான்.

ண்கள், பெண்கள் இருவரும் உயர் அதிகாரிகள் தரும் பாராட்டுதல்களை, அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறார்கள், ஆண்களுக்கு இவை வருடம் ஒரு முறை சம்பள, பதவி உயர்வுகளாக இருந்தால் போதும்: பெண்கள் இவற்றுக்கும் மேலாகத் தேடுவது உயர் அதிகாரிகள் தரும் பாராட்டு வார்த்தைகளை. இந்த அங்கீகாரம் அடிக்கடி கிடைத்தால், தங்கள் வேலைகளில் அதிக அர்ப்பணிப்போடு ஈடுபடுகிறார்கள்.

ஸ்ட்ரெஸ் என்னும் மன அழுத்தம் வரும்போது, ஆண் பெண் ஆகிய இருவரின் நடைமுறைகளையும் கவனித்துப் பாருங்கள். வித்தியாசம் வெளிப்படையாகத் தெரியும். ஆண்கள் பெரிய பிரச்சினைகள் குறித்து மட்டுமே மனைவியோடு பேசு கிறார்கள். பெண்களுக்கோ, சின்ன விஷயத்தைக் கூடக் கணவரிடம் பகிர்ந்துகொள்ளாவிட்டால் தலை வெடித்துவிடும்.

மனைவியிடம் பிரச்சினை பற்றிப் பேசும்போது கணவன், அவள் தீர்வு சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறான். மனைவி, கணவன் தான் சொல்வதைக் கேட்கவேண்டும் என்று மட்டுமே எதிர்பார்க்கிறாள். அவன் தன் பேச்சைக் கவனமாகக் கேட்காமல் டி.வி பார்க்கிறான், பேப்பர் படிக்கிறான் என்று நினைத்தால் மனம் உடைந்துபோகிறாள். அவன் கவனமாகக் கேட்கவேண்டும் என்பதுதான் அவள் ஆசை.

அவன் தீர்வுகள் சொன்னால், அவள் ஆழ்மனம் அதை எதிர்க்கிறது. மன அழுத்த நேரங்களில் ஆண்கள் எதிர்பார்ப்பது தீர்வுகளை, பெண்கள் அதைவிட அதிகமாக எதிர்பார்ப்பது, தன் குறைகளை யாராவது கவனமாகக் கேட்பதை.

பெண்களுக்கு மதிப்பு கொடுங்கள். அவர்களைச் சமமாக நடத்துங்கள். அவர்கள் உடல் வலிமையிலோ, மன உறுதியாலோ ஆண்களுக்குத் தாழ்வானவர்கள் என்னும் எண்ணம் அவர்கள் மனங்களில் தோன்றாமல் கவனித்துக்கொள்ளுங்கள். நாசூக்காக, நேர்மையாகப் புகழுங்கள். அவர்கள் பேசுவதைக் கவனமாகக் கேளுங்கள். கேள்விகள் கேளுங்கள். இந்தக் கேள்விகள் அவர்களைச் சோதிப்பவையாக இருக்கக்கூடாது: அவர்கள் கருத்துக் களை விளக்கும் வாய்ப்புகளாக இருக்க வேண்டும்.

பெண்களிடம் இரண்டு ஆயுதங்கள் உண்டு. ஒன்று மேக்கப், இன்னொன்று கண்ணீர். அதிர்ஷ்டவசமாக, இவை இரண்டையும் அவர்கள் ஒரே சமயத்தில் பயன்படுத்தமுடியாது.”

இந்த அடிப்படையில் பெரும்பாலான ஆண்கள், பெண்கள்பற்றி வைத்திருக்கும் அனுமானங்கள் என்ன தெரியுமா?
பெண்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். தங்கள் அழகையும், அழுகையையும் காட்டி ஜெயிக்கப் பார்ப்பார்கள் என்பதாகும்! பெண்களே, இது நிஜமல்ல என்று உங்கள் அணுகுமுறையால் நிரூபியுங்கள். அறிவு பூர்வமாக விவாதியுங்கள். செவ்வாயும் சுக்கிரனும் சந்திக்கட்டும், கை குலுக்கட்டும், பிரச்சினைகள் தீரட்டும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"