வீட்டு வேலைக்கு வந்த இளம் பெண்களை கற்பழித்த மதபோதகர்


உத்தரப்பிரதேசம் மாநிலம், சஹரன்பூர் மாவட்டத்தை சேர்ந்த மதபோதகர் ஒருவர் தனது வீட்டில் வேலை செய்வதற்காக ரூர்கி பகுதியில் இருந்து இரண்டு இளம் வயது சகோதரிகளை அழைத்து வந்தார்.

சமீபத்தில், ரூர்கியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி வந்த இளைய சகோதரி, அந்த மதபோதகர் தன்னையும் அக்காவையும் மிரட்டி கற்பழித்து விட்டதாக தாயாரிடம் தெரிவித்தார். மேலும், மதபோதகரின் மகன் மற்றும் அவனது நண்பர்கள் மூவரும் தங்களை அடுத்தடுத்து கற்பழித்ததாகவும் அந்த பெண் கூறியதையடுத்து, அவரது தாயார் இது தொடர்பாக ரூர்கி போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, சஹரன்பூர் மாவட்டத்துக்கு விரைந்து சென்ற ரூர்கி போலீசார், மதபோதகரின் வீட்டில் இருந்த மூத்த சகோதரியை மீட்டனர். இளம்பெண்களை அடைத்து வைத்து கற்பழித்த குற்றச்சாட்டின் கீழ் மதபோதகரை கைது செய்து, இவ்வழக்கு தொடர்பான விசாரணையை சதார் பசார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தலைமறைவாக இருக்கும் மதபோதகரின் மகன் மற்றும் அவரது நண்பர்களை சதார் பசார் போலீசார் தேடி வருகின்றனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"