மாம்பழ ஆசை காட்டி ஏழு வயதுச் சிறுமியை வன்புணர்வு செய்த சிறுவர்கள்


மேற்கு டெல்லியில் மூன்று சிறுவர்கள் ஏழு வயதுச் சிறுமியைக் கூட்டாக வன்புணர்வு செய்துள்ளனர்.

டெல்லியின் பச்சிம் விஹார்ப் பகுதியில் மீரா பாக் எனுமிடத்தில் உள்ள சேரிப்பகுதியில் வாழும் இச்சிறுமியின் அண்டை வாசிகளான 12 மற்றும் 14 வயதுச் சிறுவர்களே இச்சிறுமியை இயற்கைக்கு மாறான பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

அச்சிறுமி 'துசேரி' வகை மாம்பழத்தின் மீது ஆசை உள்ளவள் என்பதை நன்கறிந்த மூவரும், கடந்த ஞாயிறன்று இரவு 9 மணிக்கு, அச்சிறுமியிடம் மாம்பழம் தருவதாக ஆசைகாட்டி, அருகிலிருந்த பூங்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பெரிய பூங்காவின் மூலையில் தனித்த இடமொன்றில் அமர்ந்து நால்வரும் மாம்பழம் தின்றனர்.

பின் சிறுவர் மூவரும் அச்சிறுமியை இயற்கைக்கு மாறான முறையில் கூட்டு வன்புணர்வு செய்தனர். அடர்ந்த மரங்களும் இருளும் சூழ்ந்த ஒதுக்குப் புறமான அவ்விடத்தில் சிறுமியின் அலறலை யாரும் கேட்கவில்லை. வன்செயலால் மயங்கிய அச்சிறுமியை அப்படியே போட்டு விட்டு மூவரும் ஓடிவிட்டனர்.

சற்று நேரம் கழித்து நினைவு திரும்பிய சிறுமி வலியால் கதறியழுததை அப்பகுதியில் சிலர் கண்டு, அவளை அவளது வீட்டில் சேர்த்தனர். தினக்கூலியான தன் தாயிடம் தனக்கு நேர்ந்த கொடுமையைச் சிறுமி விவரித்தாள்.

அன்றிரவு 11 மணிக்குத் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், கூட்டு வன்புணர்வை உறுதி செய்தனர். சிறுமி கூறிய விபரங்களின் படி மூன்று சிறுவர்களும் நேற்றுக்காலை கைது செய்யப்பட்டனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"