கணவரால் கர்ப்பமான வேலைக்கார பெண்ணை ஏற்றுக்கொண்ட ஆசிரியை

மனைவியின் உதவிக்காக வந்து தங்கி இருந்த உறவுக்கார பெண்ணை வாலிபர் கர்ப்பமாக்கினார். காவல் நிலையத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் அந்த பெண்ணை ஏற்றுக் கொள்ள வாலிபரின் மனைவி சம்மதம் தெரிவித்தார்.

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், அவரது உறவினர் பெண்ணுக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

வாலிபர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி பிரபல பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களின் உறவினர் பெண் ஒருவரும், இவர்களுடன் தங்கி இருந்து வீட்டு வேலைகளை கவனித்து வந்தார். அந்த பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

வீட்டில் தங்கி இருந்த பெண்ணுடன் ஆசிரியையின் கணவர் நெருக்கமாக பழகினார். இதனால் அந்த பெண் கர்ப்பமாக பிரச்னை வெடித்து மகளிர் காவல் நிலையம் வரை சென்றது. போலீசார் விசாரணைக்காக அழைத்த போது இளம்பெண்ணின் கர்ப்பத்துக்கு நான் காரணம் அல்ல. நான் ஆண்மை அற்றவன் என்று கூறி அந்த வாலிபர் நாடகம் ஆடினார்.

ஆனால் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டார். பின்னர், குடும்பத்தினரை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தனது கணவரால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை ஏற்றுக் கொள்ள ஆசிரியை சம்மதித்தார். இதற்கு ஆசிரியை குடும்பத்தினரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. அவளுக்கு பிறக்கும் குழந்தையை என் குழந்தையாக நினைத்து நான் வளர்ப்பேன் என கூறி அந்த இளம்பெண்ணை ஆசிரியை கரம் பிடித்து அழைத்து சென்றார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"