சுற்றுலா பயணிகளிடம் போலி ‘செக்ஸ் ஸ்பிரே’ விற்கும் கும்பல்


கன்னியாகுமரியில் சில நாட்கள் மட்டும் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து அந்த மர்ம பொருள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த பொருட்களை வாங்கிய ஆண்களும் அதை ரகசியமாக எடுத்துச்சென்றனர். இது கடற்கரையில் பொருட்கள் விற்பனை செய்யும் மற்ற வியாபாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி அவர்கள் அந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள் இதுபற்றி விசாரணை நடத்தினர். அப்போது ஆண்கள் நீண்ட நேரம் செக்சில் ஈடுபடும் வகையில் கிளர்ச்சியை தூண்டும் ஒருவித செக்ஸ் ஸ்பிரே என்பது தெரியவந்தது. அதை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வாங்கி பயன்படுத்தி வருவதும் தெரிந்தது.

அது உண்மையில் செக்ஸ் ஸ்பிரே இல்லை என்பதும், மிகவும் குறைந்த விலை மதிப்புள்ள நறுமண பொருளான அதை, ரூ.400 முதல் ரூ.500 வரை அந்த கும்பல் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. அதை பயன்படுத்தியவர்களுக்கு தோலில் அரிப்பும், எரிச்சலும் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகுதான் செக்ஸ் ஸ்பிரே போலியானது என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதை வெளியே சொன்னால் வெட்கக்கேடு என்று நினைத்து புகார் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.

அதன் அடிப்படையில் இந்த தகவலை சமூக ஆர்வலர்கள் சுற்றுலா போலீசாருக்கும், கன்னியாகுமரி போலீசாருக்கும் தெரிவித்துள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் கன்னியாகுமரியில் சீசன் தொடங்க இருக்கிறது. அதற்குள் போலி செக்ஸ் ஸ்பிரேயை விற்பனை செய்யும் கும்பலை போலீசார் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"