ஃபேஸ்புக்கில் உள்ள ‘பாதுகாப்பு ஓட்டை’ (அதிர்ச்சி தகவல்)



பிரிட்டிஷ் மென்பொருள் பொறியாளரும், சால்ட் ஏஜென்சி என்னும் தனியார் நிறுவனமொன்றின் தொழில்நுட்பத் தலைவருமான ரெசா மொயாண்டின் ஃபேஸ்புக்கில் பயனர்களின் தகவல்களின் பாதுகாப்பு குறித்து மேற்கொண்ட ஆய்வில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. "Who can find me?" என்னும் அம்சத்தில் "Everyone/public" என்னும் ஆப்ஷனை தேர்வு செய்யும் பயனர்களின் மொபைல் நம்பர் பிறருக்கு சுலபமாக தெரிந்துவிடும் அபாயம் உள்ளது என்பதை அவர் கண்டறிந்துள்ளார்.

மொயாண்டின் தனக்கு தெரிந்த எளிய வழிமுறை பயன்படுத்தி, சாத்தியமான ஆயிரக்கணக்காண பல தொலைப்பேசி எண்களை உருவாக்கியுள்ளார். அவற்றை ஃபேஸ்புக்கின் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தில் (application programming interface) பதிவிட்ட போது, பலரின் பெயர்கள், அவர்களின் சுய விவரங்களுடன் தோன்றியுள்ளதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

பொதுவாக வங்கியில் அகவுண்ட் நம்பரை வைத்து வாடிக்கையாளரின் வீட்டு முகவரி உட்பட முழு தகவலை எடுப்பது போன்று, ஃபேஸ்புக் கணக்குடன் மொபைல் நம்பரை இணைப்பது, பயனர்களின் தகவல்களை திருட வாய்ப்பு உள்ளது என மொயாண்டின் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வுக்கு பிறகு ஃபேஸ்புக் நிறுவனத்திடம் தகவல்கள் பாதுகாப்பை அதிகரிக்க வலியுறுத்தி வருகின்றனர்.

திருடப்படும் தகவல்கள் விளம்பர நிறுவனங்களுக்கு விற்கப்படலாம். தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தபடலாம். பிரபலங்களின் பெயர்களை பாழாக்க பயன்படுத்தபடலாம். மேலும் பெண்களின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த ஆய்வையும், ஃபேஸ்புக் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டையும், ஃபேஸ்புக் நிறுவனம் மறுத்துள்ளது. பயனர்களின் தகவல்கள் திருடப்பட வாய்ப்பில்லை. பயனர்களுக்கு பிரைவசி (Privacy) அம்சங்கள் பல உள்ளன. ஃபேஸ்புக்கில் ”பாதுகாப்பு ஓட்டை” உள்ளது என்னும் குற்றசாட்டை முற்றிலுமாக மறுக்கிறோம் என ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"