வாடகை வீட்டின் முன்பணத்திற்கு சட்டத்தின் வரையறை


சொந்த வீடு வைத்திருப்பவர்களை விட வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் தான் சென்னை போன்ற நகரங்களில் அதிகம். வாடைகை வீடு என்று வரும்போது வாடகையைத் தவிர்த்து முன்பணமாக (அட்வான்ஸ்) ஒரு பெரிய தொகையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.

ஏழை எளிய மக்களை பொறுத்தவரை முன்பணம் கொடுப்பது பெரும் சவாலகவே இருக்கும். 10 மாத வாடகை அல்லது 5 மாத வாடகை என்று வீட்டு உரிமையாளர்கள் கேட்பார்கள். ஆனால், ஒரு மாத வாடகைப் பணத்தை முன் பணமாகக் கொடுத்தால் போதும் என்று சமீபத்தில் சென்னை 13-வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.

இந்த உத்தரவின் மூலம் கூதலாகக் கொடுத்த வாடகை முன்பணத்தைத் திரும்பப் பெற முடியுமா? வழக்கும் தீர்ப்பும் அண்மையில் சென்னை வீட்டு வாடகைதாரருக்கும் உரிமையாளருக்குமான வழக்கு விசாரணையின் தீர்ப்பு வாடகைதாரர்களின் வயிற்றில் பாலை வார்த்தது என்று சொல்லலாம்.

இரண்டு மாத வாடகையைக் கொடுக்காத வாடகைதாரர் வீட்டைக் காலி செய்ய உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், முன் பணமாக எவ்வளவு கொடுப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.

1996-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நடந்த, வீட்டு வாடகை தொடர்பான வழக்கில், வீட்டு உரிமையாளருக்கு, வாடகைதாரர், ஒரு மாத வாடகையை முன்பணமாகக் கொடுத்தால் போதும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டி சென்னை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நிலுவையில் உள்ள வாடகைப் பணம், ஒரு மாத முன்பணம் ஆகியவற்றைப் பிடித்துக்கொண்டு மீதிப் பணத்தை வாடகைதாரருக்கு வீட்டு உரிமையாளர் கொடுத்துவிட வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவு கூறுகிறது.

இந்த வழக்கை முன்மாதிரியாகக் கொண்டு தற்போது வீட்டில் குடியிருப்பவர்கள் ஒரு மாத வாடகையை முன் பணமாக வைத்துக்கொண்டு, எஞ்சிய தொகையைக் கேட்டால் உரிமையாளர்கள் கொடுப்பார்களா? ஒரு வேளை ஒரு மாதத்துக்கு மேல் கொடுக்கப்பட்ட வாடகைப் பணத்தை உரிமையாளர்கள் கொடுக்க மறுத்தால் எங்கு முறையிடுவது? வழக்கறிஞரின் விளக்கம் “வாடகை வீட்டுக்குச் செல்பவர்கள் ஒரு மாத வாடகையைக் கொடுத்தால் போதும் என்று சட்டம் சொல்கிறது. எனவே முன்பணமாக ஒரு மாத வாடகைப் பணத்துக்கு மேல் உரிமையாளர்கள் கேட்க முடியாது.

ஏற்கெனவே கூடுதலாக முன்பணம் கொடுத்திருந்தால் அதை உடனே கேட்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு மாத வாடகைப் பணத்தை முன் பணமாக வைத்துகொள்ளச் சொல்லிவிட்டு மீதிப் பணத்தை கழிக்கச் சொல்லிவிடலாம். வீட்டைக் காலி செய்வதற்கு முன்பாக நீங்கள் திட்டமிட்டு வாடகைப் பணத்தைக் கழித்துவிடலாம்” என்கிறார் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் எஸ்.பி. விஸ்வநாதன்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"