முக்கிய பைல்களை படங்களில் மறைத்து வைக்க


ஏதேனும் படங்களின் பின்புறத்தில் நம்முடைய முக்கியமான பைல்களை மறைத்து வைக்கலாம். சாதாரணமாக அந்த பைலை ஓபன் செய்தால் போட்டோ மட்டுமே தெரியும் அதற்கு பின்னால் இருக்கும் உங்களின் பைல்கள் தெரியாது. Winzip, Winrar ஆகிய மென்பொருட்களில் ஓபன் செய்தால் மட்டுமே பின்புறத்தில் உள்ள பைல்களை பார்க்க முடியும்.
இதற்கு முதலில் நீங்கள் மறைக்க விரும்பும் பைல்களை மொத்தமாக Compress செய்து கொள்ளுங்கள்.அடுத்து கீழே உள்ள டவுன்லோட் பட்டனை க்ளிக் செய்து மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் கொள்ளுங்கள்.இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை டவுன்லோட் செய்தவுடன் நேரடியாக இயக்கலாம்.

அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.அதில் picture என்ற கட்டத்தில் உங்களின் ஏதோ ஒரு படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.அடுத்து Compressed file என்ற இடத்தில் நீங்கள் compress செய்து வைத்து இருக்கும் பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

Output Picture file என்ற இடத்தில் ஒரு jpg பைலை தேர்வு செய்து இதில் நீங்கள் மேலே Picture பகுதியில் கொடுத்த அதே பைலை கூட தேர்வு செய்து கொள்ளவும். அப்படி கொடுத்தால் Replace செய்ய வேண்டும் என்ற செய்தி வரும் அதில் Yes கொடுத்து விடுங்கள்.இப்பொழுது நீங்கள் அந்த மூன்று கட்டங்களையும் நிரப்பியவுடன் அங்கு உள்ள Ok கொடுத்து விடுங்கள்.

உங்களுடைய பைல்கள் மறைக்க பட்டது என செய்தி வரும் அதை OK கொடுத்து வந்திருக்கும் உங்கள் பைலை சாதரணமாக ஓபன் செய்து பாருங்கள்.வெறும் படம் மட்டுமே தெரியும்பின்னால் இருக்கும் நம் பைல்கள் யாருக்கும் தெரியாது. அதை Winzip அல்லது Winrar மென்பொருட்களில் ஓபன் செய்தால் மட்டுமே அந்த போட்டோவின் உள்ளே இருக்கும் பைல்களும் தெரியும்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"