குழந்தைகளுக்கான இணையதளங்கள்




1. Kidsmart
லண்டனிலிருந்து செயல்படும் இந்த இணையதளம் குழந்தைகளுக்கு இணையம் தொடர்பான பல்வேறு விசயங்களை கற்றுத்தருகிறது. சாட்டிங், சோசியல் நெட்வொர்க் தளங்கள், இணைய பாதுகாப்பு என்று இன்னும் நிறைய விசயங்களை சின்ன சின்ன டிப்ஸ்களாக சொல்லி தருகிறது.
முகவரி:  http://www.kidsmart.org.uk/

2. Yahoo Kids
குழந்தைகளுக்காக யாஹூ நடத்தும் வலைத்தளம். விளையாட்டுக்கள், படங்கள், நகைச்சுவைகள், பொதுஅறிவு செய்திகள் இன்னும் நிறைய இருக்கின்றன. பெற்றோர்களுக்காகவும் ஒரு பகுதி இருக்கின்றது.
முகவரி: http://kids.yahoo.com/

3. Ask Kids
முன்னணி தேடுபொறிகளில் ஒன்றான Ask.com தளத்தின் குழந்தைகளுக்கான தேடுபொறியாகும்.
முகவரி: http://www.askkids.com/


4. National Geographic Kids
அமெரிக்காவிலிருந்து செயல்படும் அறிவியல், கல்வி அமைப்பான The National Geographic Society [National Geographic தொலைக்காட்சி இவர்களுடையது தான்] குழந்தைகளுக்காக நடத்தும் தளம் இது. அறிவியல், உயிரினங்கள் போன்ற பல விசயங்களை குழந்தைகள் கற்றக் கொள்ளலாம்.
முகவரி: http://kids.nationalgeographic.com/kids/

5. Kids Health
மருத்துவம் பற்றி குழந்தைகளுக்கு சொல்லி தரும் தளம். "மூட்டைப்பூச்சி கடித்தால் என்ன செய்ய வேண்டும்?", "நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றது?" என்று பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன.
முகவரி: http://kidshealth.org/kid/

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"