கணினியில் தேவையற்ற மென்பொருள்களை நீக்க..





குறிப்பிட்ட கால இடைவெளியில் கணினியில் தேங்கியுள்ள தேவையற்ற மென்பொருள்களை நீக்குவது முக்கியம். Control Panel சென்று Add or Remove Programs மூலமாக ஒவ்வொரு மென்பொருளாக கண்டறிந்து நீக்கலாம். அப்படி நீக்கினாலும் தேவையற்ற கோப்புகள் கணினியிலே தங்கி விடும் வாய்ப்புகள் அதிகம். அதிக அளவில் மென்பொருள்களை கணினியில் அடுக்கும் போது உங்கள் கணினி திணற ஆரம்பிக்கும்.


எனவே உங்கள் கணினியில் அடிக்கடி உபயோகப்படுத்தும் மென்பொருள்கள் தவிர மற்றவற்றை நீக்கி விடுங்கள்.இதனை பயன்படுத்தி உங்கள் கணினியில் உள்ள தேவையற்ற மென்பொருள்களை மொத்தமாக தேர்ந்தெடுத்து நீக்கி விடலாம்.

இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள். அதில் 'Batch Uninstall' என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். பின்பு தேவையற்ற மென்பொருள்களை தேர்ந்தெடுத்து கொண்டு Uninstall Checked Programs என்பதனை கிளிக் செய்து நீக்கி கொள்ளுங்கள். இது அந்த மென்பொருள்களை எவ்வித தடயமும் இன்றி நீக்கி விடும்.

மென்பொருள் தரவிறக்க கீழே சொடுக்கவும்.



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"