கடவு சொல் தெரியாத Administrator கணக்கில் நுழைய


முதலில் உங்கள் விண்டோஸ் பயனர் கணக்கில் நுழைந்துக் கொள்ளுங்கள்.அங்கே search box இல் CMD என டைப் செய்து Command Prompt லிங்கில் வலது க்ளிக் செய்து Run as Administrator ஐ தேர்வு செய்யுங்கள்.


இங்கு net user administrator /active:yes என டைப் செய்து Enter கொடுக்கவும்.டைப் செய்யும் பொழுது சரியாக கவனித்து மேலே தரப்பட்டுள்ளது போல உள்ளீடு செய்யவும்.

இப்பொழுது ஒருமுறை Log out செய்து, பின்னர் வரும்பொழுது இந்த Administrator கணக்கும் திரையில் தோன்றுவதை கவனிக்கலாம். இந்த கணக்கிற்கு இப்போது இப்போடகடவுச்சொல் ஏதும் இருப்பதில்லை.

இந்த வசதியை இப்படியே தொடர்வதாக இருந்தால் இந்த கணக்கிற்கு கடவுச்சொல் இட்டு வைப்பது நல்லது. அல்லது உங்கள் வேலை முடிந்த பிறகு, இந்த கணக்கை மறுபடி பழையபடி மறைத்து வைக்க மேலே சொன்ன வழிமுறையின்படி சென்று net user administrator /active:no எனும் கட்டளையை கொடுத்துவிடலாம்.


இதே net user கட்டளையை பயன்படுத்தி விண்டோஸ் XP யில் மற்றொரு Administrator உள்ள பயனர் கணக்கில் நுழைந்து, DOS prompt சென்று net user administrator * என்ற கட்டளையை உள்ளீடு செய்வதன் மூலமாக Administrator கணக்கின் கடவுசொல்லை மாற்றிவிடலாம்.இதற்காக பழைய கடவுச்சொல்லை நாம் அறிந்திருக்க வேண்டியதில்லை.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"