உடலுறவுக்காக உயிரையும் கொடுக்கும் ஆண்கள்


இனப்பெருக்க ரீதியில பார்த்தோம்னா, எதிர்பாலினத்தை கவர்வதற்க்காக செய்யும் சில வீரமான/ஆபத்து நிறைந்த செயல்களில் பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள். பலனாக அவர்களுக்கு லாபமே அதிகம் நஷ்டமில்லை என்கிறது இதுவரையிலான ஆய்வுகள்! ஏன்னா, எடுத்துக்கிட்ட அந்த செயலில் வெற்றிடைந்து, விரும்பிய பெண்ணை அடைவதன்மூலம், குறைந்தபட்சம் அவன் சந்ததி தொடரும்/வளரும் வாய்ப்பையாவது உருவாக்கிவிடுகிறான் ஆண். அதன்பின் அவன் இறந்தாலும் அது ஒரு பொருட்டல்ல இனப்பெருக்கத்தைப் பொறுத்தவரை, காரணம் அவன் சந்ததி உருவாகிவிட்டது!

“பரிணாமத்தில் ஒரு விளையாட்டு உண்டு. அது உன் மரபனுக்களை அடுத்த சந்ததிக்கு லாவகமாகக் கடத்திச் செல்வதே” என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக உளவியல் ஆய்வாளர் டேனியல் க்ரூகர் (Daniel Kruger of the University of Michigan)

ஒரு தந்தை இல்லாத குழந்தையின் கல்வியும், சமுதாயத்தில் வெற்றியும் கேள்விக்குறியாகலாம். ஆனால், ஒரு தாயில்லாக் குழந்தையின் நிலை பரிதாபத்துக்குரியது. அது தாயால் பிறந்த சில வருடங்கள் கழித்து தனித்து விடப்பட்டுவிட்ட குழந்தையானாலும்! இதற்க்கு, வளரும் நாடுகளின் ஆதரவற்றோர்/ஆனாதைக் குழந்தைக் காப்பகங்களின் எண்ணிக்கையே சரியான சான்று! ஆக, பெண்கள் ஆண்களைப்போல, காதலுக்காக உடல் ரீதியிலான, ஆபத்தான வீர தீரச் செயலகளிலெல்லாம் ஈடுபடுவதை தவிர்த்துவிடுகிறார்கள் பரிணாம வளர்ச்சியின்படி என்று யூகிக்கிறார் இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆன்னீ கேம்பெல் ( Anne Campbell of Durham University in England)

ஆனால், இதற்க்கு நேர் எதிராக இருக்கும் ஆண்கள், தனக்குப் பிடித்தப் பெண்ணை/அழகான பெண்களை எப்படியாவது கவர்ந்து/ஈர்த்துவிட வேண்டி எதாவது ஒரு ஆபத்தான செயலில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள்!

குழந்தைப் பெறுதல் மற்றும் குழந்தை வளர்ப்பு என்னும் இரு உடல்வருத்தும்/உடலுழைப்பு சார்ந்த பொறுப்பை ஏற்கவேண்டிய பெண்கள், பொறுப்பான அல்லது திறமைமிக்க ஆண்களையே தேர்ந்தெடுப்பார்கள் என்பது ஆண்களுக்கு நன்றாகத் தெரியும் (அடிமனதிலாவது இருக்கும்!). இங்கே திறமை/பொறுப்பு என்பது சமுதாயத்தில் அந்தஸ்து மற்றும் பொருட்செல்வம் என்னும் இரு அளவுகோள்களால் கணிக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்க என்கிறார் க்ரூகர்!

பரிணாமப்படி பார்த்தால், தன் புகழை/திறமையை நிலைநாட்டவும், பின்பு அதை விளம்பரம்படுத்தவும் , பெரும்பாலும் வன்முறை, வீர தீரச் செயல்கள் மற்றும் பல்வேறு வகையான ஆபத்து நிறைந்த செயல்களையே தொன்றுதொட்ட காலத்திலிருந்து ஆயுதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள் ஆண்கள் என்பது புலப்படும்! இம்மாதிரியான யுக்திகள், இன்றுவரையிலும் தொடர்கின்றன என்பதற்க்கு தன் க்ரெடிட் கார்டுகள் மற்றும் வங்கிக்கணக்கில் கொட்டிக்கிடக்கும் பனமதிப்பையும் காட்டி பெண்களை கவரும்/கவர முயற்ச்சிக்கும் சில/பல இன்றைய ஆண்களே சரியான சான்று!
ஆண்களுக்கு மத்தியிலான போட்டியின் வெற்றி-தோல்வியும், இழப்புகளும்!

பெண்களைக் கவர்ந்து வாழ்க்கையில் ஜெயித்துவிட ஆண்கள் ஈடுபடும் வீர தீரச் செயல்களும், அதன்விளைவாக அவர்களின் வாழ்நாளும்/ஆயுட்காலமும் பொருளாதாரச் சூழ்நிலைகளால் பாதிக்கப்படுகிறது என்று கண்டறிந்துள்ளார் க்ரூகர்! அதாவது, சுமார் 70 நாடுகளின், ஆண்களின் துணையைத் தேர்ந்தெடுக்கும் போட்டியை ஊக்குவிக்கும்/பாதிக்கும் கலாச்சார மற்றும் பண்பாட்டு காரணிகளை ஆராய்ந்ததில், “பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் ஒருவரின் செக்ஸ் உறவு வெற்றி இரண்டும் ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை வெவ்வேறு விதமாக பாதிக்கின்றன, மாறாக பெண்களோ இவ்விரண்டினால் பாதிக்கப்படுவதில்லை என்று தெரியவந்துள்ளது! (பார்ரா…..இது வேறயா?)

ஆனால், பொருளாதார சமநிலை மற்றும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளற்ற/குறைந்த நாடான நார்வே போன்றவற்றில் ஆண்கள் மற்றும் பெண்களின் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட ஒரே அளவில் ஆனால் சராசரியாக ஆண்களைவிட பெண்கள் 4.5 வருடம் அதிகம் வாழ்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது! ஆனால், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த, பணக்கார மற்றும் ஏழை மக்கள் வாழும் கொலம்பியா போன்ற நாடுகள், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆண்கள் பெண்களை விட விரைவில் இறந்தவிடுகிறார்கள்! காரணம், அந்த ஆண்கள் அந்தஸ்த்து, பணம் இறுதியில் செக்ஸ்/காதலுக்காக வன்முறை, மன உளைச்சல் நிறைந்த செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்கிறார் க்ரூகர்! விளைவு, ஆண்-பெண் இறப்பி விகித வித்தியாசம், கொலம்பியாவில் 7.8 வருடங்கள், அமெரிக்காவில் 5.2 வருடங்களால். அதாவது, பெண்களைக்காட்டிலும் ஆண்கள் சீக்கிரம் இறந்துவிடுகிறார்கள்! என்ன கொடுமை சார் இது?!

இதையெல்லாம் விட பெரிய கொடுமை என்னன்னா, கற்பனையான பொருளாதார ஏற்றத்தாழ்வு கூட ஆண்களின் ஆயுட்காலத்தை பாதிக்கிறதாம்?! உதாரணமா, அந்தஸ்த்து சார்ந்த தொலைக்காட்சி அலைவரிசைகளான எம்.டிவி (MTV) போன்றவை பணக்காரத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றனவாம்?! விளைவு, அம்மாதிரியான தொலைக்காட்சி அலவரிசைகளைப் பார்க்கும் ஆண்கள், “ம்ம்ம்….நானும்கூட இது மாதிரியான விலை உயர்ந்த பொருட்கள்/பணம் எல்லாம் சம்பாதிக்கனும்” அப்படீன்னு அவங்களோட எதிர்பார்ப்புகளும் பல மடங்கு கூடிவிடுகிறது என்கிறார் க்ரூகர். அப்புறம் என்ன சும்மாவா இருப்பாங்க, பார்த்ததையெல்லாம் சம்பாதிக்க இரவு பகலா உழைக்கிறது, அது வாங்கனும் இது வாங்கனும்னு மன உளைச்சலை அதிகப்படுத்திக்கிறதுன்னு “ஒரே ரணகளாமாயிடும் வாழ்க்கை”!

ஒருவனுக்கு ஒருத்தியும், ஒருவனுக்கு பல பெண்களும்!

“ரெண்டு பெண்டாட்டிக்காரன் திண்டாட்டக்காரன்” அப்படீன்னு நம்ம ஊருல சொல்லிக்கேட்டதுண்டு! இப்போதான் தெரியுது அது விஞ்ஞானப்பூர்வமாவும் உண்மைன்னு! ஆமாங்க, பாலிகைனி (polygyny) அப்படீங்கிற ஒருத்தர் பல பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும் வழக்கத்துக்கும் ஆண்கள் இறப்பு விகிதத்துக்கும் தொடர்பிருக்குதாம். அதாவது, பாலிகைனி வழக்கத்துல ஒரே ஆண் (அந்தஸ்த்தில் உயர்ந்தவன்) பல பெண்களை மணந்து குழந்தைபெறுவதால், அந்தஸ்த்து ஏணியில் கீழே இருக்கும் மீதமுள்ள ஆண்களுக்கு தன் பெண்களை மணந்து தன் சந்ததியை உருவாக்கும் வாய்ப்பு வெகுவாக குறைந்துவிடுகிறதாம்?!

இதுமாதிரியான பாலிகைனி வழக்கத்துனால ஒருத்தருக்கு சமுதாய அந்தஸ்த்து ஏணியில விரைவாக மேலே போகிற வாய்ப்பும், லாபங்கள்/பலன்கள் இருந்தாலும், அதெல்லாம் சும்மா வர்றதில்ல, பல ஆபத்துகள் அப்புறம் சமயத்துல இறப்பு இப்படியான விஷயங்களோடதான் வருதூங்கிறாரு ஆய்வாளர் க்ரூகர்! அது சரி…?!

ஆனா, இது மாதிரியான பாலிகைனி/செக்ஸ் போட்டிகள்ல ஆர்வமில்லாத ஆண்கள் (காரணம் பெரும்பாலும் நல்ல குடும்பத்தோட சந்தோஷமா இருக்கிறது அல்லது வாழ்க்கையில வேறு லட்சியங்களை அடைய முனைவது) பெண்களைக் கவர ஆபத்து நிறைந்த செயல்கள்ல ஈடுபடுறது இல்லைன்னு இன்னபிற ஆய்வுகள் சொல்கின்றனவாம்!

ஆக மொத்தத்துல, இந்த ஆய்வு என்ன சொல்லுதுன்னா, “ஒருவனுக்கு ஒருத்தியா (monogamous) சமுதாய/பொருளாதார ஏற்றத்தாழ்வுகளற்ற நாடுகள்/சமூகத்தில் வாழும் ஒரு ஆணின் வாழ்நாள் செழிப்பாக/மகிழ்ச்சி நிறைந்த இருக்கும்” என்கிறது!

அதனால, “ரதிகளைத் தேடி, அடைந்துவிடவேண்டி ஆபத்துகள்/மன உளைச்சல் நிறைந்த செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, நமக்கு பொருத்தமா ஒரு சங்கீதாவை, சாதனாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ்க்கையை வாழ எத்தனிக்கிறது எல்லா ஆண்களுக்கும் சாலச்சிறந்தது” அப்படீங்கிறாரு க்ரூகர்!

“காதல்/கல்யாணம் பண்ணா தமன்னா/அசின்/நயன்தாரா மாதிரி ஒரு வெயிட்டான ஃபிகரைத்தான் காதலிக்கனும்/கல்யாணம் பண்ணனும் அப்படீன்னு நினைக்கிறது உள்ளுணர்வு சார்ந்த ஒரு உந்துதல் என்றாலும் அந்த மாதிரியான உள்ளுணர்வுகள் ஒரு மனிதனோட வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் அப்படீங்கிறதுக்கு எந்தவொரு உத்திரவாதமுமில்லை” என்பதுதான் இந்த ஆய்வு முன்வைக்கும் கருத்து!

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"