கோயிலுக்கு வந்த இளம்பெண்ணை ஏமாற்றி குருக்கள் உல்லாசம்

திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த குருக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். செங்குன்றம் அருகே பாடியநல்லூர் பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் ராஜகுமாரி (27). இவர், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

ஆவடி அருகே திருமுல்லைவாயலில் உள்ள சிவன் கோயிலுக்கு அடிக்கடி செல்வேன். திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர் நகரை சேர்ந்த ராகவேந்திரன் (36) கோயிலில் குருக்களாக இருக்கிறார். அவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலித்தோம். பிறகு அவருடன் சேர்ந்து இன்சூரன்ஸ் கம்பெனியில் ஏஜென்டாக பணியாற்றினேன். கடந்த மார்ச் 21ம் தேதி ராகவேந்திரன் என்னை மூச்சு பயிற்சி செய்ய அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்றார். வீட்டில் யாரும் இல்லை. வீட்டில் உள்ள சாமி படத்துக்கு முன் சத்தியம் செய்து, என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறினார்.

பின், வீட்டில் என்னுடன் உல்லாசமாக இருந்தார். இதன்பிறகு, நண்பர்கள் முன்னிலையில் பதிவு திருமணம் செய்துகொள்வோம் என கூறி அனுப்பிவிட்டார். ஆனால் என்னை திருமணம் செய்யாமல் காலம் கடத்தினார். கடந்த ஜூன் மாதம் அவரை சந்தித்து பேசினேன். என்னை திருமணம் செய்ய வேண்டும் என்றால் கார் மற்றும் ரூ.50 லட்சம் தரவேண்டும் என்றார். அவ்வளவு பணம் என்னால் கொடுக்க முடியாது என்றேன். திருமணம் செய்ய மறுத்துவிட்டார். என்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய குருக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.

எஸ்ஐ மலர்ச்செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். இன்று காலை குருக்கள் ராகவேந்திரனை கைது செய்தார். அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் போலீசார் அடைத்தனர். கோயிலுக்கு வந்த இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய குருக்கள் கைது செய்யப்பட்டிருப்பது திருமுல்லைவாயல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"